சண்டை போட்ட சாக்‌ஷி

சண்டை போட்ட சாக்‌ஷி

3 mins read
dc46b78d-051d-48f7-a07c-d59179c2e31e
-

"திரை­யு­ல­கில் ஏற்­பட்­டுள்ள பெரும் மாற்­றங்­கள் கார­ண­மாக பெண் கலை­ஞர்­க­ளுக்கு நல்ல மரி­யா­தை­யும் வர­வேற்­பும் கிடைத்து வரு­வ­தா­கச் சொல்­கி­றார் சாக்‌ஷி அகர்­வால்.

அவர் கதாநாய­கி­யாக நடிக்­கும் படம் 'நான் கட­வுள் இல்லை'. நடி­கர் விஜய்­யின் தந்தை எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கர் இயக்­கும் இந்­தப் படத்­தில் சமுத்­தி­ரக்­கனி உள்ளிட்­டோர் முக்­கியக் கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், எஸ்­ஏசி போன்ற மூத்த இயக்­கு­ந­ரின் இயக்­கத்­தில் நடிப்­பது மிக அரிய வாய்ப்பு என்­றும் தன் மீது எஸ்­ஏசி மிகுந்த நம்­பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கி உள்­ள­தா­க­வும் சொல்­கி­றார் சாக்‌ஷி அகர்­வால்.

"இந்­தப் படத்­தில் ஏழெட்டு சண்­டைக் காட்­சி­கள் உள்­ளன. அவற்­றில் நானும் சமுத்தி­ரக்­க­னி­யும் நடித்­துள்­ளோம். இந்­தப் படத்­தின் கதை­யைச் சொன்­ன­போதே, சண்­டைக் காட்­சி­கள் குறித்து விரிவாக விவ­ரித்­து­விட்­டார் எஸ்­ஏசி சார்.

"மேலும் இந்­தக் காட்­சி­களில் எனது முகம் 'குளோஸ் அப்' முறை­யில் திரை­யில் காட்­டப்­படும் என்­ப­தால் 'டூப்' போட வாய்ப்பு இல்லை என்­றும் தெளிவு ­ப­டுத்தி விட்­டார். அப்­ப­டி­யா­னால் அந்­தக் காட்­சி­களில் நடிக்க அதிகம் மெனக்­கெட வேண்­டி­இருக்­கும் என்­ப­து­தான் அவர் மறை­மு­க­மா­கத் தெரி­வித்த தக­வல்.

"தொடக்­கத்­தில் கொஞ்­சம் பயம் இருந்­தது என்­றா­லும் பிறகு சுதாரித்துக்­கொண்­டேன். இயக்­கு­நர் சொன்னதைச் சவா­லாக ஏற்­றுச் செயல்­பட முடிவு செய்து, உரிய சண்­டைப் பயிற்சி பெற்றேன்," என்­கி­றார் சாக்‌ஷி.

சண்­டைப் பயிற்­சி­யா­ளர் கனல் கண்ணன்­தான் இவருக்குச் சில வாரங்­கள் பயிற்சி அளித்­தா­ராம். மிகக் கடி­ன­மான பயிற்­சி­யாக அது இருந்­தது என்­றும் சொல்­கி­றார். அதே­ச­ம­யம் தாம் தொடர்ந்து மேற்­கொண்டு வரும் உடற்­ப­யிற்­சி­தான் இந்­தச் சவா­லான பயிற்­சிக்குத் துணை நின்­றது என்­கி­றார்.

"நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் உடற்­ப­யிற்­சி­யில் கவ­னம் செலுத்­து­வது என் வழக்­கம். அடிப்­படை தசைப்­பயிற்சிக்கு கணி­ச­மான நேரம் ஒதுக்கு­வேன். தசையை வலு­வாக்­கும்­போது இயல்­பா­கவே நம்­மால் கடி­ன­மான வேலை­க­ளைச் செய்ய முடி­யும். அதற்­கான உடல் வலு நம்­மி­டம் இருக்­கும்.

"சண்­டைக் காட்­சி­களில் நடிக்க வேண்­டும் என்று இயக்­கு­நர் எஸ்­ஏசி சொன்­ன­போது நான் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தற்கு இது­தான் கார­ணம். உண்­மை­யில் இந்­தச் சவா­லில் நான் ஜெயித்­து­விட்­ட­தாக உணர்கிறேன்," என்­கி­றார் சாக்‌ஷி.

அதற்­காக 'நான் கட­வுள் இல்லை' படத்தை வெறும் அடி­த­டிப் பட­மாக வகைப்­ப­டுத்­தி­விட முடி­யாது என்று சொல்­லும் சாக்‌ஷி அப்பா, மகள் பாசம், குடும்ப உற­வு­கள், அள­வான நகைச்­சுவை என இதர பல அம்­சங்­களும் இருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­கி­றார்.

"அண்­மைக்­கா­லங்­களில் நாய­கியை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் படங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. பல முன்­னணி நடி­கை­கள் நல்ல கதைக்­க­ளங்­க­ளா­கத் தேர்வு செய்து நடித்து வரு­கின்­ற­னர். நாமும் இது­போன்ற வாய்ப்பு­கள் கிடைத்­தால் சாதிக்க முடி­யும் என்று நினைத்­தி­ருந்­தேன்.

"அதற்­கேற்ப எஸ்­ஏசி சார் இந்த வாய்ப்பை அளித்­த­போது, இதை முழு­மை­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று நினைத்­தேன். இந்த விஷ­யத்­தில் சமந்தா, நயன்­தாரா உள்­ளிட்­டோர்­தான் எனது வழி­காட்­டி­கள்," என்று சொல்­லும் சாக்‌ஷி, படப்­பி­டிப்­பின்­போது இயக்­கு­நர் எஸ்ஏசி­யின் வேகம் தமக்கு வியப்­ப­ளித்­தது என்­கி­றார்.

படப்பி­டிப்பின்போது அடுத்­த­டுத்துப் பட­மா­கும் காட்­சி­கள் குறித்­துத்­தான் எஸ்­ஏசி அதி­கம் பேசி­னா­ராம். தனது மகன் விஜய் குறித்து ஏதும் பேச­வில்லை­யாம்.

தின­மும் எஸ்­ஏ­சி­யின் வீட்­டில் இருந்து மதிய உண­வும் வந்­து­வி­டும் என்­றும் அதை அவர் தன்­னு­டன் பகிர்ந்துகொண்­ட­தா­க­வும் சொல்­கி­றார்.

"அதுபோன்ற சுவை­யான உணவு வேறு எங்­கும் கிடைக்­காது. தமிழ்த் திரை­யு­ல­கத்­தின் உச்ச நடி­க­ரின் தாயார் சமைத்த உணவை சாப்­பி­டும் வாய்ப்பு எவ்­வ­ளவு பேருக்­குக் கிடைக்­கும்?

"அண்­மை­யில் வெளி­யான 'வாரிசு', 'துணிவு' ஆகிய இரு படங்­க­ளை­யும் பார்த்­து­விட்டு எனது மகிழ்ச்­சியை எஸ்.ஏ.சந்திரசேகர் சாரி­டம் வெளிப்­ப­டுத்­தி­னேன்.

"எனக்கு இரண்டு படங்­க­ளுமே பிடித்­தி­ருந்­தன. விஜய், அஜித் ஆகிய இரு­வ­ருக்­குமே தமிழ்ச் சினி­மா­வில் நிரந்­தர இடம் உண்டு," என்று சொல்­லும் சாக்‌ஷி, அடுத்து பிர­பு­தேவாவுடன் 'பகிரா' என்ற படத்­தில் நடித்­துள்­ளார்.