பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் 'வசந்த முல்லை'. இதில் அவரது ஜோடியாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார்.
இப்படத்தின் விளம்பர குறு முன்னோட்ட காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்ளு மாறு சில முன்னணி கதாநாயகர் களிடம் கோரிக்கை விடுத்தாராம் பாபி சிம்ஹா. ஆனால் ஒருவர்கூட கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து இந்த விழாவில் பங்கேற்ற செய்தியாளர்களில் சிலரையே குறுமுன்னோட்ட காட்சித் தொகுப்பை வெளி யிடுமாறுகேட்டுக் கொண்டது படக்குழு.
அதன் பின்னர் பேசிய பாபி, முன்னணி நாயகன் ஒருவரை வரவழைத்து இந்த விழாவை நடத்த விரும்பியதாகவும் அதற்கான நேரம் கைகூடி வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
"இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டு அணுகியபோது, எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நடித்துக் கொடுத்தார் ஆர்யா. அதற்காக அவருக்கு நன்றி.
"அதேபோல், என்னுடைய குறுந்தகவலைப் பார்த்துவிட்டு, தன் வீட்டுக்கே என்னை வர வழைத்து குறுமுன்னோட்ட காட்சித் தொகுப்பை வெளியிட்ட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கும் கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கும் நன்றி. இந்தப் படம் நிச்சயமாக அனைவரையும் கவரும்," என்றார் பாபி சிம்ஹா.
, :
தமிழகத்

