'தாமதம்கூட நல்லதுதான்'

'தாமதம்கூட நல்லதுதான்'

3 mins read

தமிழ்ப் படங்­களில் நடிக்க வேண்­டும் தமிழ் ரசி­கர்­க­ளைக் கவர வேண்­டும் ஆகியவையே திரை­யு­ல­கில் அறி­மு­க­மான புதி­தில் தமது முதன்மை இலக்­கு­க­ளாக இருந்­தன என்­கி­றார் சம்­யுக்தா மேனன்.

எனி­னும் உரிய வாய்ப்­பு­கள் கிடைக்­கா­த­தால் தாம் ஏமாற்­றம் அடைந்­த­தாக அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தனுஷ் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'வாத்தி' படத்­தில் சம்­யுக்தாதான் கதா­நா­யகி. இந்­நி­லை­யில் அஜித்­தின் புதிய படத்­தி­லும் இவரை ஒப்­பந்­தம் செய்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­கள் நடை­பெற்று வரு­வ­தா­கத் தக­வல். விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும்.

மன­திற்­பட்ட கருத்­து­களை வெளிப்­ப­டை­யா­கப் பேசக்­கூ­டிய இளம் நாய­கி­களில் சம்­யுக்­தா­வும் ஒரு­வர். 'வாத்தி' இசை வெளி­யீட்டு விழா­வில் பேசி­ய­போது, தனது பெய­ரில் சாதிக்­கான அடை­யா­ள­மாக உள்ள 'மேனன்' என்ற பகு­தியை நீக்­கு­வ­தாக அவர் அறி­வித்­தது பல­ரை­யும் வியக்க வைத்­துள்­ளது.

இதை­ய­டுத்து அவ­ரது முற்­போக்­கான சிந்­த­னை­யைப் பாராட்­டு­வ­தாக ரசி­கர்­கள் பலர் சமூக ஊட­கங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

"நான் கேரள மாநி­லம் பாலக்­காடு பகு­தி­யைச் சேர்ந்­த­வள். சிறு வயது முதலே தமி­ழில் தெளி­வா­க­வும் சர­ள­மா­க­வும் பேசு­வேன். அத­னால் தமிழ்ப் படங்­களில் நடிக்­கும்­போது எந்­த­விதச் சிர­ம­மும் இருக்­காது.

"தமி­ழில் உரிய வாய்ப்­பு­கள் கிடைக்­க­வில்­லையே என்ற வருத்­தம் எனக்கு உண்டு. அதே­ச­ம­யம் தேடி­வந்த பல வாய்ப்­பு­களை நான் மறுக்­க­வும் செய்­தேன். ஒரு­வேளை தனுஷ் படத்­தில் அவ­ரு­டன் இணைந்து நடிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் முந்தைய வாய்ப்­பு­கள் தள்­ளிப்­போ­ன­தாக இப்­போது நினைக்­கத் தோன்­று­கிறது," என்­கி­றார் சம்­யுக்தா.

'வாத்தி' படத்­தில் அர­சுப் பள்ளி ஆசி­ரி­யை­யாக நடித்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், கல்­வித்­து­றை­யில் உள்ள குறை­பா­டு­க­ளைச் சுட்­டிக்­காட்­டும் வகை­யில் அந்­தப் படம் உரு­வாகி உள்­ளது என்­கி­றார்.

சம்­யுக்தா 12ஆம் வகுப்பு வரை­தான் படித்­துள்­ளா­ராம். அதற்­குள் சினிமா வாய்ப்­பு­கள் தேடி வந்­த­தால் படிப்­பில் கவ­னம் செலுத்த முடி­யா­மல் போன­தாம்.

எனி­னும் அனை­வ­ரும் பட்­டப்­ப­டிப்பு வரை கட்­டா­யம் படிக்க வேண்­டும் என்­றும் இன்­ன­து­தான் படிக்க வேண்­டும் என யாரை­யும் கட்­டா­யப்­ப­டுத்­தக் கூடாது என்­றும் சொல்­கி­றார்.

"சிறு­வ­ய­தில் நாம் பெறும் கல்­வி­தான் நம்­மு­டன் கடை­சி­வரை துணை­யாக நிற்­கும். அதை யாரும் நம்­மி­டம் இருந்து பறித்­து­விட முடி­யாது.

"அதே­ச­ம­யம் சாதி என்­பது நமக்­கான அடை­யா­ளம் அல்ல. சாதிப் பெயரை நமது பெய­ரில் இருந்து நீக்­கு­வ­தால் எத்­த­கைய இழப்­பும் ஏற்­பட்­டு­வி­டாது.

"எனது பெயர் சம்­யுக்தா மட்­டும்­தான். 'மேனன்' என்ற சாதி அடை­யா­ளத்தை நான் பெய­ருக்­குப் பின்­னால் சேர்த்­துக்­கொள்ள விரும்­பு­வ­தில்லை.

"மலை­யா­ளத் திரை­யு­ல­கில் சம்­யுக்தா என்ற பெய­ரில் நான்­கைந்து நடி­கை­கள் உள்­ள­னர். அத­னால் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் என்­னைத் தனி­யா­கச் சுட்­டிக்­காட்­டு­வ­தற்­காக இந்த `மேனன்' எனும் அடை­யா­ளத்­தைப் பெய­ரு­டன் சேர்த்­து­விட்­ட­னர்.

"தயவு செய்து என்னை `மேனன்' என்று யாரும் சாதியை வைத்து அடை­யா­ளப்­ப­டுத்­தா­தீர்­கள். எனக்­குச் சாதியே பிடிக்­காது. என்­னைச் சம்­யுக்தா என்று அழைத்­தால் போது­மா­னது," என்­கி­றார் சம்­யுக்தா.

ஏற்­கெ­னவே மலை­யா­ளத் திரை­யு­ல­கைச் சேர்ந்த முன்­னணி நாய­கி­களில் ஒரு­வ­ரான பார்­வ­தி­யும் தனது பெய­ரில் உள்ள சாதி அடை­யா­ளத்தை நீக்­கி­விட்­டார்.

தன்­னைப் பார்­வதி என்று குறிப்­பிட்­டால் போதும் என்­றும் ரசி­கர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

தற்­போது இத்­த­கைய முடிவை எடுத்­தி­ருக்­கும் சம்­யுக்­தா­வுக்­கும் பாராட்­டு­கள் குவிந்­துள்­ளன.