ஆசையே அழிவுக்குக் காரணம் என்கிறது 'சித்தார்த்'

ஆசையே அழிவுக்குக் காரணம் என்கிறது 'சித்தார்த்'

1 mins read
924e0156-5dfd-4c22-8772-542b137786f9
-

'பன்­றிக்கு நன்றி சொல்லி', 'பருந்தா­கிறது ஊர்க் குருவி' படங்­களில் நாய­க­னாக நடித்­த­வர் நிஷாந்த் ரூஸோ. இவர் இப்­போது நாய­க­னாக நடிக்­கும் படத்­துக்குச் 'சித்­தார்த்' என்று தலைப்பு வைத்­துள்­ள­னர். நாய­கி­யாக ராஷ் நடிக்­கி­றார்.

எபிக் தியேட்­டர் சார்­பாக ஹரி­ஹ­ரன் தயா­ரிக்­கும் இந்­தப் படத்­தில் நாய­கி­யாகப் புது­மு­கம் ராஷ் நடிக்­கி­றார், கதை, திரைக்­கதை, வச­னம் எழுதி ஜூட் ரொமா­ரிக் இயக்­கு­கி­றார்.

லோக­நாத் சஞ்­சய் ஒளிப்­ப­தி­வைக் கவ­னிக்க ஜேடி இசை அமைக்­கி­றார்.

"இது அதி­ர­டி­யும் திகி­லும் நிறைந்த பட­மாக உரு­வா­கிறது. ஆசையே அழி­வுக்குக் கார­ணம் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. மேலும், விழிப்­பு­ணர்வு பெறு­தல் , அறி­தல், புரிந்து கொள்­ளு­தல் ஆகி­ய­வற்றை மைய­மாக வைத்து திரைக்­கதை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

"முக்­கியக் கதா­பாத்­தி­ரங்­களில் மேலும் பலர் நடிக்­கின்­ற­னர். தொடக்­கம் முதல் இறு­தி­வரை அனைத்­துத் தரப்பு ரசி­கர்­க­ளை­யும் கவ­ரும் வகை­யில் இப்­ப­டம் உரு­வா­கிறது," என்­கி­றார் இயக்­கு­நர் ஜூட் ரொமா­ரிக்.

சென்னை, புதுவை, ஏற்­காடு பகு­தி­களில் முக்­கியக் காட்­சி­களைப் பட­மாக்­கு­கின்­ற­னர்.