மும்பையில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் நடிகை சமந்தா ஒரு வீடு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வீட்டின் விலை பதினைந்து கோடி ரூபாய் எனத் தகவல். ஏற்கெனவே நடிகை ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட முன்னணி நாயகிகள் மும்பையில் வீடு வாங்கி குடியேறி உள்ளனர். இப்போது சமந்தாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். புது வீடு குறித்து சமந்தா தரப்பில் இருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எனினும் திரையுலகில் உள்ள நெருக்கமான நண்பர்களை மட்டும் புது வீட்டைப் பார்க்க அவர் அழைப்பு விடுத்துள்ள தாகக் கூறப்படுகிறது.
நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்கிறார் விஜய் சேதுபதி. நல்ல நடிகன் என்று ரசிகர்களிடம் பாராட்டு பெறு வது மட்டுமே தமது ஒரே இலக்கு என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள் ளார். "என்னை 'பான் இந்தியா' நட்சத்திரம் என்று சிலர் பாராட்டுகிறார்கள். அதில் எனக்கு அறவே விருப்பம் இல்லை. அதைவிட நல்ல நடிகன் என்ற பாராட்டைத்தான் விரும்புகிறேன். சிலர் அளிக்கும் பட்டங்களும் சில பாராட்டுகளும் ஒரு நடிகனுக்கும் இயக்குநருக்கும் ஏன் ஒரு படத்துக்குமேகூட அழுத்தம் தருகின்றன," என் கிறார் விஜய் சேதுபதி.
அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கப்போவது மகிழ்திருமேனி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. முன்னதாக அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. எனினும் சில பிரச்சினைகளால் அவர் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் நாயகி திஷா பதானி சண்டைப் பயிற்சி மேற்கொள்வது தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. நின்ற இடத்திலேயே பலமுறை சுழன்று எதிரிகளைத் தாக்குவது, சுவரின்மீது தன் கால்களைப் பதித்து பறப்பது என திஷா
அந்தக் காணொளியில் அதிரடி காட்டுகிறார். இதையடுத்து ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள் ளனர். 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு பிஜி தீவில் நடைபெறுகிறது. திஷா பதானி பங்கேற்கும் சண்டைக் காட்சிகள் அங்குதான் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல்.

