அபர்ணா தாஸ்: கதாநயகன் எனக்கு சிபாரிசு செய்தார்

அபர்ணா தாஸ்: கதாநயகன் எனக்கு சிபாரிசு செய்தார்

1 mins read
95a2dbab-867c-4d59-b49d-b106e1232c5c
-

"எனக்­காக நடி­கர் கவின் சிபா­ரிசு செய்து பட வாய்ப்பை பெற்­றுத் தந்­தார் என்­பது உண்­மை­தான்," என்­கி­றார் இளம் நாயகி அபர்ணா தாஸ்.

'பீஸ்ட்' படத்­தில் சிறு கதா­பாத்­தி­ரத்­தில் நடித்த இவர் தற்­போது 'டாடா' என்ற தமிழ்ப் படத்­தில் நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

"இது­தான் நான் நாய­கி­யாக நடித்­துள்ள முதல் தமிழ்ப் படம். இயக்­கு­நர் கணேஷ் கேர­ளா­வுக்கு வந்து, என்­னைச் சந்­தித்து கதையை விவ­ரித்­தார். கவின் இல்­லை­யென்­றால் இந்­தப் படத்­தில் நான் இல்லை. கார­ணம், அவர்­தான் இயக்­கு­ந­ரி­டம் என்னை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

"பொது­வாக ஒரு கதா­நா­ய­கன் தன்­னு­டன் நடிக்­கும் நாய­கிக்கு சிபா­ரிசு செய்­தால், அதை மையப்­ப­டுத்தி பல­வி­த­மான 'கிசு­கிசு'க்கள் வெளி­யா­கும். அவை குறித்து நான் கவ­லைப்­ப­டு­வ­தாக இல்லை. அத­னால்­தான் கவின் செய்த உத­வியை வெளிப்­ப­டை­யா­கச் சொல்­கி­றேன்.

"தமிழ்த் திரை­யு­ல­கில் நிறைய சாதிக்க வேண்­டும் என்­பது என் ஆசை. அதற்­கான சிறந்த தொடக்­க­மாக இந்­தப் படம் அமை­யும்," என்­கி­றார் அபர்ணா.