குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் புதுப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
'அக்கரன்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அருண் கே.பிரசாத் இயக்குகிறார்.
கதைப்படி இதில் விவசாயியாக நடிக்கிறாராம் பாஸ்கர். இரு பெண் குழந்தைகளுக்கு அப்பாவாகவும் திரையில் தோன்றுவார்.
"இரு மகள்களில் ஒருவர் தேர்வு எழுதச் செல்லும்போது அரசியல் பகை காரணமாக கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். மகளின் மறைவுக்கு காரணமானவர்களைத் தேடிப்பிடித்து அந்த விவசாயி எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் கதை," என்கிறார் அருண்.
இப்படத்தில் வெண்பா, கபாலி விஸ்வநாத், நமோ நாராயணா, உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

