புதிய திரைக்கதை வங்கி தொடக்கம்

புதிய திரைக்கதை வங்கி தொடக்கம்

2 mins read
4327f163-d5b8-4e8b-8d62-f9a021a04d11
-

பாட­லா­சி­ரி­யர் மதன் கார்க்­கி­யும் தயா­ரிப்­பா­ளர் தனஞ்­செ­ய­னும் இணைந்து திரைக்­கதை வங்கி ஒன்றை உரு­வாக்கி உள்­ள­னர். இதனை பார­தி­ராஜா துவக்கி வைத்­தார்.

தமிழ் சினி­மா­வில் ஏற்­கெ­னவே இது­போன்ற முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. எனி­னும் மதன் கார்க்கி, தனஞ்­செ­யன் ஆகி­யோ­ரின் முயற்சி என்­ப­தால் முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது.

திற­மை­யான எழுத்­தா­ளர்­க­ளின் திரைக்­க­தை­க­ளைப் படித்து, அவற்­றுள் சிறந்த திரைக்­க­தை­களை மட்­டும் தேர்ந்­தெ­டுத்து, படப்­பி­டிப்­புக்­குத் தயார் நிலை­யில் அவற்றை உரு­வாக்கி, தயா­ரிப்பு நிறு­வ­னங்­களுக்கு வழங்­கும் தள­மா­க­வும் சிறந்த திரைக்­கதை எழுத்­தா­ளர்­க­ளை­யும், தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளை­யும் ஒருங்­கி­ணைக்­க­வும் இந்த முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­றது," என இரு­வ­ரும் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தத் திரைக்­கதை வங்­கிக்கு 'ஸ்கி­ரிப்­டிக்' எனப் பெயர் சூட்டி உள்­ள­னர். பணத்தை போட்டு வைத்து தேவை­யான போது எடுத்­துக்கொள்ள வங்கி இருப்­பதைப் போன்று திரைக்­கதையை பதிவு செய்து வைத்து அதனை தேவை­யா­ன­போது எடுத்­துக்கொள்­ள­வும் அல்­லது தேவைப்­படும் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு கொடுக்­க­வும் திரைக்­கதை வங்கி உரு­வாகி உள்­ளது.

"தற்­போது உரு­வா­கும் பெரும்­பா­லான திரைப்­ப­டங்க ளின் திரைக்­க­தை­கள் அனு­ப­வம் வாய்ந்த திரைக்­கதை எழுத்­தா­ளர்­களை கொண்டு தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை. இதன் கார­ண­மாக, தோல்வி அடை­யும் திரைப்­ப­டங்­க­ளின் எண்­ணிக்கை ஒவ்­வொரு ஆண்­டும் அதி­க­ரித்து வரு­வ­தைப் பார்க்­கி­றோம்.

"இதை கருத்­தில் கொண்டு, ஸ்கி­ரிப்­டிக் வழங்­கும் திரைக்­கதை­க­ளின் தரத்தை அனு­ப­வம் வாய்ந்த திரைக்­கதை எழுத்­தா­ளர்­கள், இயக்­கு­நர்­கள், நிபு­ணர்­கள் அடங்­கிய குழு உறுதி செய்­கிறது. எனவே, ஸ்கி­ரிப்­டிக் வங்கியில் இருந்து பெறப்­பட்ட திரைக்­க­தை­கள், படங்­க­ளாக உரு­வா­கும்­போது நல்ல வர­வேற்பை அவை பெறும் என நம்­ப­லாம்," என அறிக்கை மேலும் தெரி­விக்­கிறது.