திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
8d7a74b5-5b84-4ae7-9fce-23fc85c2e82e
-
multi-img1 of 2

 தன்னைப் பற்றி வெளிவரும் அவதூறான கருத்துகளையும் சிலரது பேச்சுகளையும் தாம் கண்டுகொள்வதே இல்லை என்கிறார் இளையராஜா. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒரு சிற்பிக்கு எவ்வாறு தேவையில்லாத பாகங்களை நீக்கினால் மட்டுமே அவர் எதிர்பார்த்த சிலை உருவாகுமோ, அதுபோல தேவையில்லாத தட்டுகளை நீக்கினால் மட்டுமே முறையான தாளம் உருவாகும் என்றார்.

 பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய 'லவ் டுடே' திரைப்படம் திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்துள்ளது. மொத்தம் ஒன்பது கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் 80 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி இந்தப் படம் திரைக்கண்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள இரு திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 ஐந்து மாநிலங்களில் தாம் சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி நல்ல நகைச்சுவை என்கிறார் ராஷ்மிகா மந்தனா. வெறும் வதந்திதான் என்றாலும் இதுபோன்ற தகவல்கள் உண்மையாகிவிட்டால் அதில் தமக்கும் மகிழ்ச்சிதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஹைதராபாத், கோவா, கூர்க், மும்பை, பெங்களூரு என ஐந்து இடங்களில் ராஷ்மிகா சொத்துகள் வாங்கியுள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.

 கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் காஷ்மீரில் முகாமிட்டுள்ளது 'லியோ' படக்குழு. கச்சிதமாகத் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

மாலை வேளையில் திறந்த வெளியில் விறகுகளைக் குவித்து, தீ மூட்டி நாயகன் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் குளிர் காய்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமது சமூக ஊடகப் பக்கங்க ளில் பகிர்ந்துள்ளார் லோகேஷ்.

பனிக்குவியலுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.

படப்பிடிப்பில் விஜய் வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகத்துடன் காணப்படு கிறாராம். திட்ட மிட்டபடி படப்பிடிப்பு நடந்து வருவதுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படு கிறது. படப்பிடிப்பின்போது யாரும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் படக்குழுவில் உள்ள பலர் தங்களுடைய கைப்பேசிகளை தங்கு விடுதியிலேயே வைத்து விட்டுத் தான் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்களாம்.