விஜய் ஆண்டனி நடித்து வரும் 'பிச்சைக்காரன் 2' படம் மருத்துவத்துறையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக 'மூளைமாற்று அறுவை சிகிச்சை' குறித்தும் அதில் உள்ள சாதக, பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்துள்ளனராம்.
"ஏறத்தாழ 3.45 மணி நேரம் இந்தப் படம் திரையில் ஓடும். மக்களுக்கு இதுவரை தெரியப்படுத்தாத பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சிறு துளியை இந்தப் படம் மக்களிடம் கொண்டு சேர்க்கும்," என்கின்றனர் படக்குழுவினர்.
இப்படத்தின் அறிமுகக் காணொளி தற்போது வெளியாகி உள்ளது. அதில், 'பணம் இந்த உலகுக்குக் தீங்கு விளைவிக்கும்' என்ற வரியை திரையில் காட்டுகின்றனர். அப்போது பின்னணியில் தொழிலதிபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பான செய்தி ஒலிக்கிறது.
'மூளை மாற்று அறுவை' சிகிச்சை குறித்த நேர்காணலில் அந்த சிகிச்சையால் தீயவர்கள் பயன்பெற்றால் என்ன நடக்கும் என்பது விவாதிக்கப்படுகிறது," என்கிறார் விஜய் ஆண்டனி.

