குறட்டையை மையப்படுத்தி உருவாகும் படத்துக்கு 'குட் நைட்' எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்தில் 'ஜெய் பீம்' மணிகண்டன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மீதா நடிக்கிறார்.
ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி, ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவைக் கவனிக்க, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
"இது காதலும் நகைச்சுவையும் நிறைந்த படமாக உருவாகிறது. தூங்கும்போது ஒருவர் விடும் குறட்டையானது மற்றவர்களையும் பாதிக்கிறது. அவர்களின் தூக்கம் கெடுகிறது.
"ஆனால் பலர் இதைப் புரிந்துகொள்வதில்லை. இப்படிக் குறட்டையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நகைச்சுவையாகவும் அர்த்தமுள்ள திரைக்கதை மூலமாகவும் விவரிக்கப் போகிறோம்," என்கிறார் இயக்குநர்.

