'இது ஓர் ஆசிரியரின் கதை'

'இது ஓர் ஆசிரியரின் கதை'

3 mins read

'நெஞ்­ச­முண்டு நேர்­மை­யுண்டு ஓடு ராஜா' படத்தை இயக்­கிய கார்த்­திக் வேணு­கோ­பா­லின் அடுத்த பட­மாக உரு­வா­கிறது 'PT சார்'. இதில் ஹிப் ஹாப் ஆதி நாய­க­னா­க­வும் காஷ்­மீரா பர்­தேசி நாய­கி­யா­க­வும் நடிக்­கின்­ற­னர்.

அண்­மை­யில் வெளி­யான இப்­ப­டத்­தின் முதல் தோற்றச் சுவ­ரொட்­டிக்கு பலத்த வர­வேற்பு கிடைத்­துள்ளது. இந்­நி­லை­யில் படம் அனைத்து தரப்பு ரசிகர்­களை­யும் கவ­ரும் வகை­யில் உரு­வாகி உள்­ள­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர்.

"கதையை உரு­வாக்­கி­ய­தும் முத­லில் ஆதி­யி­டம்­தான் விரி­வா­கச் சொன்­னேன். அவ­ர் எனது சகோ­த­ரர் போன்­ற­வர். கதை ரொம்­பப் பிடித்­தி­ருப்­ப­தா­கச் சொன்­னார்.

"அதன் பிறகு கொரோனா முடக்க நிலை கார­ண­மாக அடுத்­த கட்­டத்­துக்­குப் போக முடி­ய­வில்லை. எனி­னும் அந்­தச் சம­யத்­தில் கதையை மேலும் மெரு­கேற்ற முடிந்­தது.

"இரண்­டா­வது படத்தை இயக்­கு­வ­தில் நான் அவ­ச­ரம் காட்­ட­வில்லை. கார­ணம் எனது முதல் படத்­தை­விட இது மேலும் தர­மா­ன­தாக இருக்க வேண்டும் என்று நினைத்­தேன்.

"குறிப்­பாக நல்ல கதை மட்­டு­மல்­லா­மல், தொழில்­நுட்ப ரீதி­யி­லும் ரசி­கர்­க­ளைக் கவர வேண்­டும் என விரும்­பு­கி­றேன். அத­னால்­தான் தாம­தம் ஏற்­பட்­டது போல் தோன்­று­கிறது," என்­கி­றார் கார்த்­திக் வேணு­கோ­பால்.

கதை­யைக் கேட்ட ஆதி, உடனே தயா­ரிப்­புத் தரப்பை தொடர்­பு­கொண்டு பேசி­னா­ராம். அதன் பிறகு தயா­ரிப்­பா­ளர் ஐசரி கணேஷை சந்­தித்­துப் பேச ஏற்­பாடு செய்­தா­ராம்.

"ஐசரி கணேஷ் சார் வெளிப்­படை­யா­கப் பேசக்­கூ­டி­ய­வர். எந்­த­வி­த­மான சம­ர­சத்­துக்­கும் இடம்­கொ­டுக்க வேண்­டாம். நீங்­கள் எப்­படி படத்தை உரு­வாக்க வேண்­டும் என நினைக்­கி­றீர்­களோ, அதன்­ப­டியே செய்­யுங்­கள். எனக்கு உங்­கள் மீது நம்­பிக்கை உள்­ளது என்று உற்­சா­கப்­ப­டுத்­தி­னார்.

"இதோ, அண்­மை­யில் படத்­தின் முதல் பிர­தியை அவ­ருக்­குப் போட்­டுக் காட்­டி­னோம். அதைப் பார்த்­து­விட்­டது தனது எதிர்­பார்ப்பு வீண்­போ­க­வில்லை என்­றார்.

"அந்த வார்த்­தை­க­ளைக் கேட்ட பிறகு மிகுந்த மகிழ்ச்சி ஏற்­பட்­டது," என்று உற்­சா­கம் குறை­யா­மல் பேசு­கி­றார் கார்த்­திக் வேணு­கோ­பால்.

கதைப்­படி ஆதி உடற்­ப­யிற்சி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­று­கி­றார். அவ­ருக்கு திடீ­ரென சில பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டிய சூழல் ஏற்­ப­டு­கிறது. அவற்றை அவர் எப்­ப­டிக் கையாள்­கி­றார், எத்­த­கைய தீர்­வு­க­ளைக் காண்­கி­றார் என்­ப­து­தான் கதை­யாம்.

"பள்­ளிக்­கூ­டங்­களில் நடக்­கும் சில சுவா­ர­சி­ய­மான அம்­சங்­களை எதிர்­பார்்க்­க­லாம். மாண­வர்­கள் அடிக்­கும் லூட்­டி­களும் மன­தைக் கவ­ரும். அதே­ச­ம­யம் இது முழு­நீள பொழு­து­போக்­குப் படம் அல்ல.

"முதல் பாதி­யில் காட்­சி­கள் ஜாலி­யாக நக­ரும் என்­றால் இரண்­டா­வது பகு­தி­யில் அழுத்­த­மான காட்­சி­க­ளாக நிறைந்­தி­ருக்­கும். முக்­கி­ய­மான கருத்து ஒன்­றை­யும் வலி­யு­றுத்­தும் படமாக இது உருவாகிறது.

"ஆதி­யைப் பொறுத்­த­வரை படத்­தின் பணி­கள் தொடங்­கிய நாள் முதல் இப்­போ­து­வரை மிகுந்த அர்ப்­ப­ணிப்­பு­டன் தனக்­கான வேலை­யைச் செய்து வரு­கி­றார். அவ­ரது திற­மை­யும் உழைப்­பும் இந்­தப் படத்­தின் தூண்­கள் என்­பேன்.

"கதா­நா­யகி காஷ்­மீரா பர்­தே­சிக்கு அறி­மு­கம் தேவை இல்லை. நாடு முழு­வ­தும் உள்ள இளை­யர்­க­ளின் மன­தைக் கவர்ந்­த­வர்.

"கதைப்­படி அவர் ஆதி வேலை பார்க்­கும் அதே பள்­ளி­யில் ஆங்­கில ஆசி­ரி­யை­யாக வரு­கி­றார். தமி­ழில் தட்­டுத்­த­டு­மாறி பேசு­கி­றார். ஆனால் நடிப்பு என்று வரும்­போது சிறு குறை­யும் சொல்ல முடி­யாது. படம் முழு­வ­தும் காஷ்­மீ­ராவை எதிர்­பார்க்­க­லாம். அதே­ச­ம­யம் கவர்ச்­சிப் பொம்மை­யாக மட்­டுமே வந்­து­போ­கா­மல் உணர்­வு­பூர்­வ­மான நடிப்­பை­யும் வழங்கி உள்­ளார்.

"நாய­கன் ஆதி எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­க­ளைக் களைய காஷ்­மீ­ரா­வும் உத­வு­வார். மொழிப் பிரச்­சி­னை­யைக் கடந்­து­விட்­டால், தமிழ்த் திரை­யு­ல­கத்­துக்கு கிடைத்த அழ­கான, திற­மை­யான நடி­கை­க­ளின் பட்­டி­ய­லில் காஷ்­மீ­ரா­வுக்­கும் நிச்­ச­யம் இடம் கிடைக்­கும்," என்­கி­றார் கார்த்­திக் வேணு­கோ­பால்.

, :

தமிழகத்  