'அப்படிச் சொல்லவில்லை'

'அப்படிச் சொல்லவில்லை'

1 mins read
13387e7c-6ce5-4911-8727-13fa0d4377e4
-

நயன்­தாரா குறித்து தாம் எந்­த­வித கருத்­தும் தெரி­விக்­க­வில்லை என நடிகை மாள­விகா மோக­னன் கூறி­யுள்­ளார்.

அண்­மைய பேட்­டி­யில், கதா­நா­ய­கி­களை 'பெண் சூப்­பர் ஸ்டார்' என்று குறிப்­பி­டு­வது தமக்­குப் பிடிக்­காது என அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இத­னால் நயன்­தா­ரா­வின் வளர்ச்­சி­யைக் கண்டு பொறாமை கொண்டு அவர் இவ்­வாறு கூறி­ய­தாக சமூக ஊட­கங்­களில் பலர் கருத்து தெரி­வித்­த­னர். இந்­நி­லை­யில், இது­கு­றித்து விளக்­கம் அளித்­துள்­ளார் மாள­விகா.

"எந்த நடி­கை­யை­யும் நேர­டி­யா­கக் குறிப்­பிட்டு நான் கருத்து கூற­வில்லை. எனது பொது­வான கருத்தை மட்­டுமே தெரி­வித்­தேன். நயன்­தா­ராவை மிக­வும் நான் மதிக்­கி­றேன். மூத்த நடி­கை­யாக அவ­ரது நம்­பிக்­கை­யூட்­டும் திரை­யு­லகப் பய­ணத்தை நான் வியந்து பார்க்­கி­றேன்," என்­கி­றார் மாள­விகா.