விஜய் கதையில் அஜித்

விஜய் கதையில் அஜித்

3 mins read
9bc66f5c-445d-4c7c-9fc5-9097d91ae945
-

நடி­கர் விஜய்க்­காக உரு­வாக்­கப்­பட்ட கதை­யில் அஜித் நடிப்­ப­தாக வெளி­யான தக­வல் இரு தரப்பு ரசி­கர்­க­ளை­யும் வியப்­பில் ஆழ்த்தி உள்­ளது. இதற்­கி­டையே, நடி­கர் விஜய் நடிக்­கும் படங்­க­ளின் வசூ­லைக் குறைப்­ப­தற்கு சில தரப்­பினர் சதி செய்­வ­தாக அவ­ரது ரசி­கர்­கள் குற்­றம்­சாட்டி வரு­கின்­ற­னர்.

'வாரிசு' படத்தை அடுத்து லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கும் 'லியோ' படத்­தில் நடித்து வரு­கி­றார் விஜய். இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு காஷ்­மீர் பகு­தி­யில் நடை­பெற்று வரு­கிறது. இந்­நி­லை­யில், 'துணிவு' படத்தை அடுத்து அஜித்­தின் அடுத்த படத்­துக்­கான அறி­விப்பு ஏதும் இது­வரை வெளி­யா­க­வில்லை.

ஓரிரு மாதங்­க­ளுக்கு முன்பு விக்­னேஷ் சிவன் தான் அஜித்­தின் அடுத்த படத்தை இயக்­கு­வார் என தக­வல் வெளி­யா­னது. இந்­தப் படத்­துக்­காக அஜித் ரூ.105 கோடி சம்­ப­ளம் வாங்க இருப்­ப­தா­க­வும் நயன்­தாரா நாய­கி­யாக நடிப்­ப­தா­க­வும் கூறப்­பட்­டது.

எனி­னும் சில பிரச்­சி­னை­க­ளால் லைகா நிறு­வ­னம் தயா­ரிக்க உள்ள இந்­தப் படத்­தில் இருந்து விக்­னேஷ் சிவன் வில­கி­விட்­டார். அவ­ருக்­குப் பதி­லாக இயக்­கு­நர் மகிழ் திரு­மேனி ஒப்­பந்­த­மாகி உள்­ளார். இது குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­க­வில்லை என்­றா­லும் படத்­துக்­கான முதற்­கட்ட பணி­கள் தொடங்­கி­விட்­ட­தா­கத் தக­வல்.

மகிழ் திரு­மேனி சொன்ன கதை­யில் அஜித் சில மாற்­றங்­க­ளைச் செய்­யச் சொல்லி இருக்­கி­றா­ராம். மேலும், படம் தொடர்­பாக இயக்­கு­நர் தரப்­புக்கு அவர் சில நிபந்­த­னை­களை விதித்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

படப்­பி­டிப்பை தொடங்­கிய நான்கு மாதங்­க­ள் அனைத்து காட்­சி­க­ளை­யும் பட­மாக்­கி­விட வேண்­டும் என்­ப­து­தான் முக்­கிய நிபந்­த­னை­யாம்.

இந்­நி­லை­யில், விஜய்க்­காக உரு­வாக்­கிய கதை­யைத்­தான் இயக்­கு­நர் மகிழ் திரு­மேனி அஜித்­தி­டம் கூறி­ய­தா­கத் தெரி­கிறது. சில மாதங்­க­ளுக்கு முன்பே விஜய்யை அணுகி அவ­ருக்­கேற்ற ஒரு கதை­யைச் சொல்லி இருந்­தார் மகிழ் திரு­மேனி. இந்­தக் கதை விஜய்க்­குப் பிடித்­துப் போன நிலை­யில், சில கார­ணங்­க­ளால் இரு­வ­ரும் இணைய முடி­யா­மல் போனது.

இந்­நி­லை­யில் தொடர்ச்­சி­யாக ஹெச்.வினோத் இயக்­கத்­தில் நடித்து வந்த அஜித்­தும் புதுக் கதை­யை­யும் இயக்­கு­ந­ரை­யும் தேடி வரு­வ­தாக தக­வல் கிடைக்க, அவரை அணு­கி­யுள்­ளார் மகிழ் திரு­மேனி. அதன் பிறகு­தான் விக்­னேஷ் சிவன் தரப்பை அஜித் ஒதுக்­கி­விட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்நிலையில், விஜய்க்­காக உரு­வாக்­கப்­பட்ட கதை­யில் அஜித் நடிப்­ப­தும் தற்­போது சர்ச்­சை­யாகி வரு­கிறது. இது விஜய்க்கு எதி­ரான சதி என்று சமூக ஊட­கங்­களில் சிலர் பதி­விட்­டுள்­ள­னர்.

மேலும், தொழில் போட்டி கார­ண­மாக விஜய் படங்­க­ளின் வசூ­லைக் குறைக்­க­வும் சில தரப்­பி­னர் சதி செய்­வ­தாக விஜய்­யின் விசு­வாச ரசி­கர்­கள் குற்­றம்­சாட்டி வரு­கின்­ற­னர்.

"விஜய்­யைப் பொறுத்­த­வரை ஒரு படத்­தின் வெளி­யீட்­டுக்­கான தேதியை முடிவு செய்த பிறகே படப்­பி­டிப்­புக்கு கிளம்­பு­வது வழக்­கம். அந்த வகை­யில், 'வாரிசு' படத்­தின் வெளி­யீட்­டுத் தேதி­யை­யும் அவர் முன்பே கணக்­கிட்­டுத்­தான் அந்­தப் படத்­தில் நடித்­தார்.

"ஆனால் அஜித் தரப்­பில் திடீ­ரென 'துணிவு' படத்­தை­யும் விஜய் தன் படத்துக்காக குறித்து வைத்த தேதி­யில் வெளி­யி­டும் முடிவை எடுத்­த­னர். இத­னால்­தான் இரு படங்­களும் திரை­யில் மோதின. இதன் மூலம் விஜய் படத்­தின் வசூ­லைக் குறைக்க வேண்­டும் என்­பதே திட்­டம்," என சிலர் சமூக ஊட­கங்­களில் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

ஆனால், 'வாரிசு', 'துணிவு' ஆகிய இரு படங்­களும் அவற்­றின் தயா­ரிப்­புத் தரப்­புக்கு நல்ல லாபத்தை பெற்­றுத் தந்­துள்­ளன என்­ப­து­தான் உண்மை என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவரப் புள்­ளி­கள்.

"விளம்­ப­ரத்­துக்­காக சிலர் இது­போன்ற வதந்­தி­க­ளைப் பரப்­பு­கின்­ற­னர். விஜய், அஜித் இரு­வ­ருமே தங்­கள் படங்­க­ளின் நில­வ­ரம் குறித்து கலந்­தா­லோ­சித்த பிறகே வெளி­யீட்­டுத் தேதியை அறி­விப்­பது வழக்­கம். எனவே அண்­மைய பட வெளி­யீடு தொடர்­பாக இரு­வ­ருக்­கும் இடையே எந்த மோத­லும் இல்லை," என்று அவர்­கள் மேலும் தெரி­வித்­துள்­ள­னர்.

'வாரிசு' படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்த போதிலும், வசூலில் முந்தைய விஜய் படங்களின் சாதனைகளை அது முறியடித்துள்ளது. அதேபோல் 'துணிவு' படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகும் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.