நடிகை இலியானா தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அவர் இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதன் காரணமாகவே அவர் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கவில்லை எனக் கூறப்பட்டது.
மேலும், தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு தடைவிதித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.
தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க பணம் பெற்றுக்கொண்டு நடிக்காததும் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறும்தான் அவர் மீதான தடைக்கு காரணம் என்று தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இலியானாவுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

