சரும மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக வெளியான தகவலை நடிகை கஜோல் மறுத்துள்ளார்.
அண்மைய பேட்டியில், திடீரென நீங்கள் வெள்ளை நிறமாக காட்சியளிக்கிறீர்களே? என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கஜோல், அண்மைக்காலமாக தாம் வெளியே அதிகம் செல்லாததே தோற்றப் பொலிவுக்குக் காரணம் என்றார்.
"சருமத்தின் நிறத்தை மாற்ற எந்தவிதமான சிகிச்சை யும் எடுக்கவில்லை. வெயிலில் அதிகமாக சுற்றாமல் கவனமாக இருக்கிறேன். அதுதான் நிற மாற்றத்துக்குக் காரணம்.
"கடந்த காலங்களில் படப்பிடிப்புக்காக வெளியில் வேலை பார்க்க வேண்டியிருக்கும். அதனால் கறுப்பாகக் காட்சியளித்தேன். இப்போது நிலைமை மாறிவிட்டதால் என் நிறமும் மாறியுள்ளது," என்கிறார் கஜோல்.