தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'குலுகுலு' படக் காட்சிகள் நீக்கம்

1 mins read
18dcec69-0ff0-4304-bb3c-1ff1089bcdb2
-

'குலுகுலு' படத்தின் தெலுங்குப் பதிப்பில் சில காட்சிகளை தணிக்கைக் குழு தன்னிச்சையாக நீக்கி உள்ளது என்று அப்படத்தின் இயக்குநர் சாடி உள்ளார்.

இந்த நடவடிக்கை நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'குலுகுலு' படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், 'குலுகுலு' படத்தின் தெலுங்குப் பதிப்பில் இந்தியப் பிரதமர் என குறிப்பிடும் காட்சியை எந்த வித விளக்கமும் இல்லாமல் தணிக்கைக் குழு நீக்கியுள்ளது என்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.

"திரைப்பட தணிக்கையின்போது தன்னிச்சையாக காட்சிகளை நீக்குவது நியாயமற்ற விஷயம். 'குலுகுலு' படத்திற்கு இது நடந்தது என்பதால் மட்டும் நான் இதைக் கூறவில்லை.

"ஜனநாயக அமைப்பில் கலை என்பது மிக முக்கியமான தூண். அதன் மீது நீங்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறீர்கள். இத்தகைய போக்கு மாற வேண்டும்," என சமூக ஊடகங்களில் ரத்னகுமார் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை, தமிழகம் என மாற்றுவதற்குப் பதில் இந்தியாவை ஒன்றிய நாடு (united states of india) எனப் பெயர் மாற்றம் செய்துவிடுமாறும் அவர் தமது பதிவில் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.