பயில்வானின் காதலிகள்

பயில்வானின் காதலிகள்

1 mins read
59584049-4003-4708-bda7-64afa144cc07
-

சர்ச்சை நடி­கர் என்று குறிப்­பிடப்­படும் பயில்­வான் ரங்­க­நாதன் (படம்) தன்னை மூன்று நடிகை­கள் காத­லித்­த­தா­கக் கூறி­யுள்­ளார்.

மூன்று பேரும் தன்னை ஒரு­த­லை­யா­கக் காத­லித்­த­தா­க­வும் தன்னை திரு­ம­ணம் செய்து கொள்­வ­தில் உறுதியாக இருந்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஆனால் நடி­கை­களைத் திரு­ம­ணம் செய்ய என் பெற்­றோர் கடும் எதிர்ப்பு தெரி­வித்த­னர். அத­னால் எனது 32வது வய­தில் பெற்­றோர் பார்த்த பெண்ணைத் திரு­மணம் செய்து கொண்­டேன்.

"நடி­கை­யைத் திரு­ம­ணம் செய்­தி­ருந்­தால் என் பெற்­றோரை இழந்­தி­ருப்­பேன். மேலும், சமு­தா­யத்­தில் எனக்­கு­ரிய அங்­கீ­கா­ரம் கிடைத்­திருக்­காது. இன்று சமு­தா­யத்­தில் எனக்கு மரி­யாதை உள்­ளது," என்­றார் பயில்­வான் ரங்­க­நா­தன்.

நடி­கை­கள் குறித்து தாம் வெளி­யி­டும் தக­வல்­கள் அனைத்தும் உண்மை என்­றும் அவற்றுக்குரிய ஆதாரங்கள் உள்ளது என்றும் அவர் கூறி­உள்ளார்.