கங்கனா: ஜோதிகா நடிப்பை ஈடுசெய்ய முடியாது

கங்கனா: ஜோதிகா நடிப்பை ஈடுசெய்ய முடியாது

2 mins read
7b88e908-1a3d-49af-b7d2-42817c03fd0f
-

ஜோதி­கா­வைப் போல் திரை­யில் நடிப்­பது சாத்­தி­ய­மில்லை என்­கிறார் கங்­கனா ரண­வத்.

'சந்­தி­ர­முகி' படத்­தில் ஜோதிகா வெளிப்­ப­டுத்­திய நடிப்பு அசா­தா­ர­ண­மா­னது என்­றும் பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

ரஜினி, நயன்­தாரா, பிரபு, ஜோதிகா, வடி­வேலு நடித்த 'சந்­தி­ர­முகி' திரைப்­ப­டம் பெரும் வெற்றிபெற்­றது. திரை­ய­ரங்­கு­களில் அதிக நாள்­கள் ஓடி சாதனை படைத்த தமிழ்ப் படங்­களில் இது­வும் ஒன்று.

பி.வாசு இயக்கி இருந்த இந்­தப் படத்­தில் ஜோதி­கா­வின் நடிப்பு அனைத்­துத் தரப்­பி­ன­ரா­லும் பாராட்­டப்­பட்­டது.

இந்­நி­லை­யில் 'சந்­தி­ர­முகி' இரண்­டாம் பாகத்தை எடுக்க முடி­வெ­டுத்த இயக்­கு­நர் வாசு, அதற்­காக ரஜி­னியை அணு­கி­ய­போது அவ­ரால் கால்­ஷீட் ஒதுக்க முடி­ய­வில்லை. எனவே ராகவா லாரன்ஸ் ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

ஜோதிகா கதா­பாத்­தி­ரத்­தில் கங்­கனா நடிப்­பது உறு­தி­யாகி உள்­ளது. எனி­னும் இரு பாகங்­களுக்­கும் இடையே பெரி­தாக எந்­த­வி­தத் தொடர்­பும் இருக்­காது என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­தப் படத்­தில் நடித்து வரு­வது குறித்து கங்­கனா சிறு காணொ­ளிப் பதிவு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். அதில் ஜோதி­காவை வெகு­வா­கப் பாராட்டி உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்­றில், தமக்­குப் பிடித்­த­மான நடிகை கங்­கனா என்று ஜோதிகா தெரி­வித்­தி­ருந்­தார். தற்­போது அந்­தப் பேட்டியைக் குறிப்­பிட்­டுள்ள கங்­கனா, ஜோதிகா­வின் பாராட்டு தமக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.

"ஜோதிகா சந்­தி­ர­மு­கி­யாக வெளிப்­ப­டுத்­திய மிகச்­சி­றந்த நடிப்பை தற்­போது நாள்­தோ­றும் நான் பார்த்து வரு­கி­றேன். 'சந்திரமுகி' இரண்­டாம் பாகத்­தின் இறு­திக்­காட்­சி­களை நாங்­கள் பட­மாக்கி வரு­கி­றோம்.

"முதல் பாகத்­தில் ஜோதி­கா­வின் நடிப்பு வியப்பை அளிக்­கக்­கூ­டி­யது. அவ­ரு­டைய நடிப்பை ஈடு­செய்­­வது சாத்­தி­ய­மற்­றது," என்று குறிப்­பிட்­டுள்­ளார் கங்கனா ரணவத்.