வருகிறார் 'சொப்பன சுந்தரி'

வருகிறார் 'சொப்பன சுந்தரி'

1 mins read
3f8a2cf6-eae8-40f5-bf6d-402a5e8230bc
-

எஸ்.ஜி.சார்­லஸ் இயக்­கத்­தில் ஐஸ்­வர்யா ராஜேஷ் (படம்) நடித்­துள்ள 'சொப்­பன சுந்­தரி' படம் விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது.

இந்­தப் படத்­தில் லட்­சுமி பிரியா, சர­ம­வுலி, தீபா சங்­கர், கரு­ணா­கரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர். அஜ்­மல் தாஷீன் இசை­ அமைத்துள்ளார். விஷால் சந்­தி­ர­சே­கர் பின்­னணி இசை­ய­மைத்­துள்­ளார்.

இந்த நிலை­யில் 'சொப்­பன சுந்­தரி' திரைப்­ப­டம் மார்ச் மாதம் வெளி­யாக உள்­ளது என்­றும் அதற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் படக்­குழு அறி­வித்­துள்­ளது.

"இது நாய­கியை மைய­மாக வைத்து உரு­வாகி உள்ள படம். ஐஸ்­வர்யா ராஜேஷ்­தான் பொருத்­த­மாக இருப்­பார் என்­ப­தால் அவரை நாய­கி­யாக ஒப்பந்­தம் செய்­தோம். எங்­கள் எதிர்­பார்ப்­புக்­கும் மேலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்­துள்­ளார். அவரது பாத்திரம் வித்தியாசமான தாக இருக்கும். இப்படம் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் கவ­ரும்," என்று நம்­பிக்­கை­யு­டன் சொல்­கி­றார் சார்­லஸ்.