தனுஷ் படத்திற்கு புது பிரச்சினை

தனுஷ் படத்திற்கு புது பிரச்சினை

2 mins read
09a984c4-840f-45f3-9281-1e8d768e220c
'வாத்தி' என்ற தலைப்பு ஆசி­ரியர்­கள் சமு­தா­யத்தை அவ­ம­திக்­கும் சொல்­லாக உள்­ளது என புதுச்­சேரி மாநில ஆசி­ரி­யர்­கள் கூட்­ட­மைப்பு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. படம்: த இந்து -

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்­ப­டம் நாளை உல­கம் முழு­வ­தும் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யாக இருக்கும் நிலை­யில் படத்­தின் பெயரை மாற்­ற­வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

தமிழ் சினி­மா­வின் முன்­னணி நடி­கர்­களில் தனு­ஷும் முக்­கி­ய­மா­ன­வர். மற்ற கதா­நா­ய­கர்

­க­ளைப்போல இல்­லா­மல் இந்தி, பிரெஞ்சு,

ஆங்­கி­லம் என அவர் பதித்­துள்ள தடம் வேறு. முதல் முறை­யாக தெலுங்­கில் நேர­டிப் படம் ஒன்­றில் கதா­நா­ய­க­னாக நடித்­துள்­ளார்.

தமி­ழில் 'வாத்தி', தெலுங்­கில் 'சார்' என இரண்டு மொழி­களில் தனித்­த­னியே எடுக்­கப்­பட்­டுள்ள 'வாத்தி' படம் ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

'வாத்தி' திரைப்­ப­டத்தை பார்த்த தணிக்கை அதி­கா­ரி­கள் இந்தப் படத்­திற்கு 'யூ' சான்­றி­தழ் அளித்­துள்­ள­னர். மேலும் இந்த படம் 2 மணி நேரம் 19 நிமி­டங்­கள் மட்­டும் ஓடக்­கூ­டி­யது.

தனுஷ், சம்­யுக்தா ஹெக்டே, சாய்­கு­மார் உள்­ளிட்ட பலர் நடித்­துள்ள இந்தப் படத்தை வெங்கி அட்­லுரி இயக்­கி­யுள்­ளார். ஜிவி பிர­காஷ் இசை­ய­மைத்த படத்­தின் பாடல்­கள் ஏற்­கெனவே வெளி­யாகி நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளன.

இந்­நி­லை­யில் 'வாத்தி' என்ற தலைப்பு ஆசி­ரியர்­கள் சமு­தா­யத்தை அவ­ம­திக்­கும் சொல்­லாக உள்­ளது என புதுச்­சேரி மாநில ஆசி­ரி­யர்­கள் கூட்­ட­மைப்பு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. மேலும் இந்தப் படத்­தின் பெயரை மாற்ற வலி­யு­றுத்தி தமி­ழக முதல்­வர் ஸ்டா­லி­னுக்கு கோரிக்கை வைத்­துள்­ள­னர்.

"ஒரு சமு­தா­யத்தை உரு­வாக்­கும் மிக­வும் உன்­ன­த­மான சமூ­கம் ஆசி­ரி­யர்­கள் சமூ­க­ம். அத­னால்­தான் முன்­னாள் குடி­ய­ரசு தலை­வர் டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன் பிறந்­த­நாளை ஆசி­ரி­யர் தின­மாக கடை­பி­டிக்­கின்­றோம்.

"பல்­வேறு அர­சி­யல் தலை­வர்­கள்­கூட ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்றி பின்­னர் மக்­கள் பணி­யாற்­றி­யுள்­ளார்­கள்.

"மனித வாழ்­வின் தொடக்­கத்­தில் மாதா, பிதா, குரு என மூன்­றா­வது அந்­தஸ்­தில் இருந்து

கல்­வியைப் புகட்டி சிறந்த

மனி­த­னாக உரு­வாக்­கும் புனித பணியை மேற்­கொண்டு வருகின்றனர்.

"அந்த ஆசி­ரி­யர் சமூ­கத்தை அவ­ம­திக்­கும் வகை­யில் தமி­ழில் மட்­டும் தரக்­கு­றை­வாக கொச்­சை­யான வார்த்­தை­யில் 'வாத்தி' என்று பெய­ரிட்டு இருப்­ப­தால் ஆசி­ரி­யர்­கள் மன­வே­தனை அடைந்து­உள்­ளார்­கள்.

"இதைக் கண்­டிப்­ப­தோடு படத்­தின் பெயரை மரி­யா­தை­யான வார்த்­தை­க­ளால் 'வாத்தியார்' என்றோ, தெலுங்­கில் வைத்­ததுபோல 'சார்' என்றோ தமி­ழில் படத்­தின் பெயரை மாற்றி வெளி­யிட வேண்­டும் என தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னுக்கு கோரிக்கை வைத்­துள்­ளோம்.

"ஆசி­ரியர்­க­ளின் கண்­ணி­யத்தைக் குறைக்­கும் வகை­யில் வெளி­யா­கும் இந்தப் படத்­தின் பெயரை மாற்ற ஆசி­ரி­யர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட மாண­வர்­கள் பெரும் தலை­வர்­க­ளாக உள்­ளார்­கள். அவர்­களும் குரல்­கொ­டுக்க வேண்­டும்," என்று புதுச்­சேரி மாநில ஆசி­ரி­யர்­கள் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் தலை­வர்

சீனி­வா­சன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

பெயர் மாற்­றப்­ப­டுமா? அல்­லது 'வாத்தி' என்ற

பெய­ரி­லேயே வெளி­யா­குமா என்று காத்­தி­ருக்­கிறது கோலி­வுட்.

இதற்கிடையில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.