நான்காவது பாடலை வெளியிட்டது படக்குழு

நான்காவது பாடலை வெளியிட்டது படக்குழு

1 mins read
66a8651c-119c-47a5-b12c-be27acdb1529
இப்படத்தின் நான்காவது பாடலான 'மயக்கும் பொழுதே' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. படம்: த இந்து -

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் நான்காவது பாடலான 'மயக்கும் பொழுதே' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் வரிகளில் சத்ய பிரகாஷ், ஸ்வேதா மோகன் பாடியுள்ள இந்தப் பாடல் சமூக வலைத்தளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.