விஜய்,லோகேஷ், அனிருத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'லியோ'. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் உருவாகி வருகிறது.
அக்டோபர் 19ஆம் தேதி படம் வெளியாவதாக படத்தின் தலைப்புடன் வெளியானது முன்னோட்டக் காட்சி.அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், படக்குழு புறப்பட்டு சென்ற இரண்டு, மூன்று நாட்களிலேயே காஷ்மீரில் இருந்து திரிஷா சென்னை திரும்பிவிட்டதாக தகவல் வெளி வந்தது.
படத்தில் ப்ரியா ஆனந்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ள காட்சிகள் இருப்பதால் லோகேஷ் கனகராஜுடன் சண்டையிட்டு திரிஷா சென்னை வந்துவிட்டதாக செய்தி வெளியாகி இருந்தது.
மேலும், 'லியோ' படம் சம்பந்தமான சில பதிவுகளை திரிஷா தன்னுடைய டுவிட்டரிலிருந்து எடுத்துவிட்டதால் அவர் 'லியோ' படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளி வந்தன.
இதற்கெல்லாம் பதில் அளிப்பதுபோல படப்பிடிப்பு குழுவுடன் காதலர் தினத்தன்று கொண்டாடிய படங்களை டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டு இருக்கிறார் திரிஷா.
மேலும் அன்றைய தினம் திரிஷாவுக்கு ரோஜா பூங்கொத்து ஒன்றையும் அன்பர் தின பரிசாக படக்குழு வழங்கி உள்ளது. படக்குழுவினருடன் அவர் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் நடிகை திரிஷா.

