ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்து கடந்த மாதம் வெளிவந்த இந்தித் திரைப்படம் 'பதான்'. இந்தியாவில் 'கேஜிஎப்' ரூ.1,200 கோடி வசூலித்து முதல் இடத்தைப் பிடித்தது. தற்பொழுது 'பதான்' இதுவரை 953 கோடி ரூபாய் வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது.
கல்கியின் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மௌலி 'கல்கி: பொன்னியின் செல்வர்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். புத்தகத்தை கல்கியின் பேத்திகளான சீதா ரவி, லட்சுமி நடராஜன் பெற்றுக்கொண்டனர்.
மீரா ஜாஸ்மின் தமிழில் இறுதியாக நடித்த படம் 'விஞ்ஞானி'. இவர் தற்பொழுது உடல் மெலிந்து மீண்டும் நாயகியாக 'விமானம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று இவருடைய பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக படக்குழு 'விமானம்' படத்தின் சுவரொட்டியை வெளியிட்டு இருக்கிறது.
'காந்தாரா' படம் இந்தியாவில் பல மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்பொழுது இந்தப் படத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிநாடுகளில் திரையிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

