தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட எட்டு மாநிலத் திரையுலகங்களைச் சேர்ந்த நடிகர்கள் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' என்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இம்முறை ஹைதராபாத், ராய்ப்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய ஆறு நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
சென்னை ரைனோஸ் அணியில் ஜீவா, விஷ்ணு விஷால், பரத், விக்ராந்த், ஆதவ் கண்ணதாசன், சாந்தனு, பிருத்வி ஆகியோர் விளையாடுகின்றனர்.
பல்வேறு சுற்று ஆட்டங்களுக்குப் பின்னர் மார்ச் 19ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.