கதாநாயகனாக நடித்து வெற்றிபெற முடியாது எனப் பலரும் தமது முகத்துக்கு நேராக கூறியதாகச் சொல்கிறார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
'லவ் டுடே' படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், கதாநாயகனாக நடிக்கும் படம் தோல்வி அடைந்தால், அதிலிருந்து தம்மால் மீளவே இயலாது எனப் பலரும் எச்சரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டார்.
"கதாநாயகனாக நடிக்க நான் தயங்கவில்லை. நல்ல கதைக்களம் வெற்றிபெறும் எனு உறுதியாக நம்பினேன். நீ ஏன் கதாநாயகனாக நடிக்கிறாய் என்றும் கேட்டனர். படம் தோற்று கீழே விழுந்தால் திரும்ப எழுவது கஷ்டம் என்று சிலர் கேலி பேசியதைப் பொருட்படுத்தவில்லை. மலை ஏற, மற்ற உபகரணங்களை விட, மலைதான் முக்கியம் என்று கருதினேன்," என்றார் பிரதீப்.