நடிகர் விஷாலும் இயக்குநர் ஹரியும் மீண்டும் இணைய உள்ளனர். ஏற்கெனவே ஹரி இயக்கத் தில் 'தாமிரபரணி', 'பூஜை' ஆகிய படங்களில் நடித் துள்ளார் விஷால். இரு படங்களுமே அடிதடிகளும் குடும்ப உணர்வுகளும் நிறைந்த படைப்புகளாக உருவாகின.இந்நிலையில், இருவரும் மூன் றாவது முறையாக இணைகின் றனர். இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தான தாம். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகத் தகவல். நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஒரே சமயத்தில் இரு படங்களுக்கான படப்பிடிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளாராம் விஷால்.
பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை திடீரென கணிசமாகக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்', 'சர்க்கஸ்', 'ராதே ஷ்யாம்' ஆகிய மூன்று படங்கள் ரசிகர்களைப் பெரிதாக ஈர்க்கவில்லை. இப்படங்களில் நடிக்க அவர் மூன்றரை கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம். இந்நிலையில், தனது சம்பளத்தை இரண்டரை கோடியாக பூஜா குறைத்துள்ள தாகத் தெரிகிறது.
அழகை மட்டுமே வைத்துக் கொண்டு சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது என்கிறார் நடிகை ராஷி கன்னா.
வித்தியாசமான கதை, கதா பாத்திரங்களைத் தேர்வுசெய்து நடித்தால் மட்டுமே திரையுலகில் சாதிக்க இயலும் என்றும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் திறமையும் அவசியம். நடிக்க வந்த புதிதில் வித்தியாசமான பாத்திரங்கள் குறித்து யோசித்ததே இல்லை. சில பாடல்கள், சில நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றும் சராசரி நாயகியாகவே வலம் வந்தேன்.
"இப்போதுதான் முக்கியமான நுணுக்கங் களைப் புரிந்து கொண்டுள்ளேன். இனி திரையில் என்னை வேறு மாதிரி பார்க்கப் போகிறீர் கள்," என்கிறார் ராஷி.
நடிகை அமலா பால் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ளாராம். அங்கு இயற்கை உணவை உட்கொண்டு யோகா சனத்தில் ஈடுபடுவது புத்துணர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார். நாடு திரும்பியதும் முழு வேகத்துடன் படப்படிப்பில் பங்கேற்க உள்ளாராம்.