'மைக்கேல்' படத்தில், தான் நடித்திருந்த முக்கிய மான காட்சிகளை நீக்கி விட்டதாக அப்படத்தின் நாயகி தீப்ஷிகா கூறி உள்ளார். எனினும் இதற் காக இயக்குநரைக் குறை கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக் கிய அப்படம் அண்மை யில் வெளியானது. சந்தீப் கிஷன் நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர்.
"தமிழில் நடித்த முதல் படத்திலேயே எனக்கு சவாலான கதாபாத்திரங்கள் அமைந்தன. கதைப்படி, கௌதம் மேனனின் இரண்டாவது மனைவியாக, சிறு வயது சந்தீப் கிஷனின் தாயாக, விடுதியில் பாடும் பாடகியாக நடித்துள்ளேன். எனினும் படத்தின் நீளம் கருதி எனது காட்சிகளை நீக்க வேண்டியதாயிற்று. ஆனால் ரசிகர்கள் எனது நடிப்பைப் பாராட்டும்போது வேறு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை," என்கிறார் தீப்ஷிகா.
அண்மையில் 22 லட்சம் ரூபாய் செலவில் புதிய இருசக்கர வாகனம் வாங்கி உள்ளார் மஞ்சு வாரியர்.
அந்த வாகனத்தை தாம் ஓட்டிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ள காணொளிப் பதிவை அவர் சமூக ஊட கங்களில் பகிர்ந்துள்ளார். அஜித்துடன் 'துணிவு' படத்தில் நடித்த போதுதான் இருசக்கர வாகனங்கள் மீது மஞ்சு வுக்கு ஆர்வம் ஏற்பட்டதாம். அந்தப் படத்தில் நடித்து முடித்த கையோடு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருசக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்ற அவர், இப்போது வாகனமும் வாங்கிவிட்டார். துணிச்ச லுக்கான சிறு படியை ஏறினாலும்கூட அது எப்போதுமே சிறந்தது. சிறந்த இருசக்கர வாகனமோட்டியாவதற்கு நிறைய கற்க வேண்டும். சாலையில் நான் தடுமாறுவதைப் பார்த்தால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள். என்னைப் போன்றோருக்கு ஊக்கமளிக்கும் அஜித்துக்கு நன்றி," என்று மஞ்சு மேலும் தெரிவித்துள்ளார்.
"நடிகர் விஜய் என்னை தனது சகோதரனாகக் கருதி அன்பு பாராட்டுகிறார்," என்கிறார் பாடலாசிரியர் விவேக். விஜய் நடித்துள்ள 'பிகில்', 'பீஸ்ட்', 'வாரிசு' உள்ளிட்ட படங்களில் பாடல் எழுதியுள்ள விவேக், விஜய் தம்மை முத்தமிடும் புகைப் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

