'லியோ' படப்பிடிப்பு நிறுத்தம்

'லியோ' படப்பிடிப்பு நிறுத்தம்

1 mins read
8d73654b-c0cd-4511-b7f8-ad8626418e4a
-

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் விஜய் நடிக்­கும் 'லியோ' படம் குறித்து ஏதே­னும் பர­ப­ரப்­பான செய்­தி­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன. இந்­நி­லை­யில், அப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு மீண்­டும் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இப்­ப­டத்­தின் முதற்­கட்ட படப்­பி­டிப்பு காஷ்­மீ­ரில் நடை­பெற்று வரு­கிறது. இதற்­காக 180 பேர் கொண்ட படக்­குழு அங்கு முகா­மிட்­டுள்­ளது.

கடும் பனிப்­பொ­ழி­வுக்கு மத்தி­யில் சில காட்­சி­க­ளைப் பட­மாக்கி வரு­கின்­ற­னர். இந்­நிலை­யில், படத்­தின் நாயகி திரிஷா திடீ­ரென சென்னை திரும்­பி­விட்­ட­தா­க­வும் அவர் அப்­ப­டத்­தில் இருந்து நீக்­கப்­பட்­ட­தா­க­வும் சில தக­வல்­கள் வெளி­யா­கின.

இத­னால் விஜய் ரசி­கர்­கள் அதிர்ச்சி அடைந்த நிலை­யில், அந்­தத் தக­வல் பொய் என்­பது உறு­தி­யா­னது.

இதை­ய­டுத்து படப்­பி­டிப்­பின்­போது ரக­சி­ய­மாக எடுக்­கப்­பட்ட ஒரு காணொளி சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி விஜய் தரப்பை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யது.

இத­னால் கடும் கட்­டுப்­பாடு­க­ளு­டன் படப்­பி­டிப்பு தொடர்ந்து நடை­பெற்­றது. படக்­கு­ழு­வி­னர் கைப்­பே­சி­க­ளைப் பயன்­ப­டுத்த தடை­ வி­திக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் 'லியோ' படப்­பி­டிப்பு மீண்­டும் தடை­பட்­டுள்­ள­தா­கத் தக­வல். படக்­கு­ழு­வைச் சேர்ந்த ஒரு­வ­ரது வீட்­டில் நிகழ்ந்த துக்­கச் சம்­ப­வம்­தான் இதற்­குக் கார­ண­மாம். மூன்று நாள்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் பட வேலை­கள் தொடங்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.