'துரோகம் செய்யவில்லை'

'துரோகம் செய்யவில்லை'

1 mins read
fa720451-b8c3-4a78-a25f-01a6f1605d27
-

தனது திரு­மண வாழ்க்கை குறித்து சிலர் வேண்­டு­மென்றே வதந்­தி­க­ளைப் பரப்­பு­வது வருத்­தம் அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார் ஹன்­சிகா மோத்­வானி.

திரை­யு­ல­கில் நடிக்க வேண்­டும் என்­ப­தற்­காக தனது குடும்­பத்­தார் சிறு வய­தில் தனக்கு 'ஹார்­மோன்' ஊசி­கள் செலுத்­தி­ய­தா­கக் கூ­றப்­ப­டு­வது அப்­பட்­ட­மான பொய் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நான் திரு­ம­ணம் செய்­து­கொண்ட சோஹைல் எனது தோழி­யின் கண­வர் என்­றும் அவர்­கள் குடும்­பத்தை உடைத்து துரோகம் செய்துவிட்­ட­தா­க­வும் பலர் என்னை மோச­மாக பேசினர். அது என் குற்­ற­மல்ல. எனக்­கும் அதற்­கும் சம்­பந்­தம் இல்லை.

"நான் பொது வாழ்க்­கை­யில் இருப்­ப­தால் என்னை வில்லியைப்­போல் சித்­தி­ரிப்­பது எளி­தான காரி­யம். இது நான் பிர­ப­ல­மாக இருப்­ப­தற்கு கொடுக்­கும் விலை," என்கிறார் ஹன்சிகா மோத்வானி.