'96' படத்துக்கான நடிப்புத் தேர்வு நடைபெற்றபோது 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம் கௌரி கிஷன் (படம்). எதிர்பாராத விதமாக அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நடிகையாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்.
திரையுலகில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் தமக்கும் எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
"நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டதே இல்லை. ஆனால் இன்று நல்ல நடிகை என்று பெயர் வாங்குவதற்காக முயற்சி செய்கிறேன். மேலும், எழுத்தாளராக வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கதைகளை எழுதும் முயற்சியையும் தொடங்கி உள்ளேன்.
"நான் பார்ப்பதற்கு சமந்தா வைப் போல் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். அதைக் கேட்கும்போது இனம்புரியாத மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுகிறது.
"சமந்தா திரையுலகில் பல சாதனைகளைப் புரிந்தவர். நானும் அவரைப் போல் பல்வேறு மொழிகளில் நடித்து திறமையை நிரூபிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்," என்கிறார் கௌரி கிஷன்.
தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக் கும் இவர், ஒரு படத்தில் தனி நாயகியாகவும் நடிக்கிறாராம்.

