தனது தாயாரும் நடிகையுமான ஸ்ரீதேவி குறித்து அவரது மகள் ஜான்வி கபூர் (படம்) சமூக ஊடகத்தில் பதிவிட்டிருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
அதில், அனைத்து இடங்களிலும் தனது தாயாரைத் தேடிக் கொண்டிருப்பதாக உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார் ஜான்வி.
"அம்மா.. உன்னை எல்லா இடங்களிலும் தேடுகிறேன். உன்னைப் பெருமைப்படுத்தும் விதமாகவே நான் அனைத்தையும் செய்து கொண்டிருப்பதாக நம்புகிறேன்.
"நான் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அவை அனைத்துமே உன்னில் தொடங்கி உன்னில்தான் முடிகிறது," என்று ஜான்வி கபூர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவைக் கண்ட ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதலும் அதிகம் சாதிக்க வாழ்த்துகளும் தெரிவித்துள்ளனர்.
இந்தித் திரையுலகில் அறிமுகமான ஜான்வி இன்னும் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. அதற்காக கடுமையாகப் போராடி வருவதாக அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் சில தினங்களில் ஸ்ரீதேவியின் நினைவு நாள் வருகிறது. எனினும் அதற்கு முன்னதாக தனது பதிவை வெளியிட்டுள்ளார் ஜான்வி.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'தாய் கிழவி' பாடல் இணையத்தில் நூறு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள் ளது. இது மிகப்பெரிய சாதனை என அப்படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறிய காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர். இப்பாடலை அனிருத் இசையில் எழுதிப் பாடியுள்ளார் தனுஷ்.
இணையத் தொடர் ஒன்றுக்காக தீவிர சண்டைப் பயிற்சி மேற்கொண்டுள்ளார் சமந்தா. இத்தொடரின் படப்பிடிப்பு குளிர் பிரதேசமான உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் நடைபெற்று வருகிறது. அங்கு எட்டு டிகிரி செல்சியஸ் குளிரில் திரிஷா பயிற்சி மேற்கொண்டாராம்.

