தொடரும் பாலியல் சீண்டல்

தொடரும் பாலியல் சீண்டல்

2 mins read
d7dffce4-9bb3-4081-99a9-5f936ede1077
-

இந்­தி­யத் திரை­யு­ல­கில் பாலி­யல் தொல்­லை­கள் நீடித்து வரு­வ­தாக இளம் நடி­கை­கள் சிலர் மீண்­டும் புகார் எழுப்பி உள்­ள­னர்.

இதை­ய­டுத்து அந்த நடி­கை­க­ளின் சமூக வலைத்­த­ளப் பதி­வு­க­ளுக்­குப் பின்­னூட்­ட­மிட்டு ஏரா­ள­மான ரசி­கர்­கள் அவர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மைய பேட்டி ஒன்­றில், தாம் பல்­வேறு வித­மான பாலி­யல் சீண்­டல்­களை எதிர்­கொண்­ட­தாக நடிகை வர­லட்­சுமி குறிப்­பிட்­டி­ருந்­தார். இந்­நி­லை­யில், இந்தி நடிகை நர்­கீஸ் பக்­ரி­யும் தனக்கு ஏற்­பட்ட அத்­த­கைய அனு­ப­வம் குறித்து வெளிப்­ப­டை­யா­கத் தெரி­வித்­துள்­ளார். 'ராக்ஸ்­டார்' இந்­திப் படத்­தின் மூலம் இளம் ரசி­கர்­க­ளைக் கவர்ந்­துள்ள இவர், இரண்டு புதுப்­ப­டங்­களில் நடித்து வரு­கி­றார்.

"எனக்­கும் சிலர் பாலி­யல் தொல்­லை­க­ளைக் கொடுத்­துள்­ள­னர். அவர்­க­ளைக் கடந்து வந்­து­தான் திரை­யு­ல­கில் சாதித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன்.

"தவ­றான எண்­ணத்­து­டன் சிலர் என்னை அணு­கி­னர். அவர்­க­ளைப் பொருட்­ப­டுத்­தி­யதே இல்லை. இது­போன்ற ஆள்­களை எப்­படி ஒதுக்கி வைக்க வேண்­டும் என்­பது எனக்கு நன்­றா­கத் தெரி­யும்.

"நான் யார் என்­பது எனக்­குத் தெரி­யும். என்னை மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருப்­பது எப்­படி என்­ப­தும் தெரி­யும். இதற்­காக நான் பிறரை எதிர்­பார்க்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

"ஒரு­சி­லர் சினிமா வாய்ப்­புக்­காக என்ன வேண்­டு­மா­னா­லும் செய்­கி­றார்­கள். ஆனால் என்­னால் அப்­ப­டிச் செய்ய இய­லாது," என்­கி­றார் நர்­கீஸ் பக்ரி.

இளம் நடிகை என்ற வகை­யில் தமக்­கான ஒரு பாது­காப்பு வளை­யத்தை, எல்­லையை உரு­வாக்கி வைத்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், தமது திற­மையை மட்­டுமே நம்பி செயல்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"சில இயக்­கு­நர்­கள் வாய்ப்­புக்­காக அவர்­கள் கூறு­வதைக் கேட்க வேண்­டும் என்­ற­னர். என்னை நிர்­வாணக் கோலத்­தில் பார்க்­க­வும் விரும்பினர். இது­போன்ற பாலி­யல் சீண்­டல்­களை எதிர்­கொண்­ட­போது, அந்த இயக்­கு­நர்­களின் எதிர்­பார்ப்பை நான் நிறை­வேற்­ற­வில்லை.

"இதன் கார­ண­மாக நான் பல வாய்ப்­பு­களை இழந்தேன். தனித்­துச் செயல்­பட்டு சாதிப்­ப­தற்­கான வழி­மு­றையை நாம்­தான் கண்­ட­றிய வேண்­டும்," என்­கி­றார் நர்­கீஸ்.

இதற்­கி­டையே, முன்­னணி நடி­கர் சரத்­கு­மா­ரின் மக­ளான நடிகை வர­லட்­சுமி, தனக்கு ஏற்­பட்ட பாலி­யல் சீண்­டல்­கள் குறித்து தெரி­வித்த தக­வல்­கள் தமிழ்த் திரை­யு­ல­கில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளன.

கடந்த சில மாதங்­க­ளா­கவே பாலி­யல் தொல்­லை­கள் குறித்து பல நடி­கை­கள் வெளிப்­ப­டை­யா­கப் பேசி வரு­கின்­ற­னர். முன்­னணி நாய­கி­க­ளும்­கூட தங்­க­ளுக்கு ஏற்­பட்ட மோச­மான அனு­ப­வங்­களை விவ­ரித்­துள்­ளதை அடுத்து, நடி­கை­க­ளின் பாது­காப்பை உறுதி செய்ய வேண்­டும் என ஒரு தரப்­பினர் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இதற்­கி­டையே, இந்தி திரை­யு­ல­கைச் சேர்ந்த மேலும் சில நடி­கை­கள் சமூக ஊட­கங்­களில் பாலி­யல் சீண்­டல்­கள் குறித்து பதி­விட்டு வரு­கின்­ற­னர். இத­னால் அங்­குள்ள சில முன்­னணி நடி­கர், இயக்­கு­நர்­க­ளுக்­குச் சிக்­கல் ஏற்­பட வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நர்கீஸ் பக்ரி

, :

தமிழகத்  