வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'இரவு' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
'சிகை', 'பக்ரீத்' ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு இப்படத்தை இயக்குகிறார்.
அரியா செல்வராஜ் என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார்.
பொன்னம்பலம், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"இதற்கு முன்பு, 'சிகை' படத்தில் திருநங்கையின் காதலைச் சொன்னேன். 'பக்ரீத்' படத்தில் ஒட்டகத்திற்கும் மனிதனுக்குமான அன்பைச் சொன்னேன்.
"மூன்றாவதாக, உளவியல், மனோதத்துவ அம்சங்களைக் கொண்ட கதைக்களத்தை உருவாக்கி உள்ளேன். ஒரு வகையில் திகில் கதை என்றும் கூறலாம்.
"ஒரே நாளில் நடப்பது போன்ற கதையைக் கொண்டு உருவாகும் படம். தன் முன்னால் நடப்பது நிஜமா, கற்பனையா என்று தீர்மானிக்க முடியாத குழப்பத்துக்கு ஆட்படுகிறான் கதாநாயகன்.
"தான் எதிர்கொள்ளும் பிரச்சினை மலைபோல் இருப்பதாக நினைத்து தொடக்கத்தில் மலைத்துப் போகிறான். எனினும், பின்னர் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதுதான் கதை," என்கிறார் இயக்குநர் ஜெகதீசன்.

