நடிகர் தனுஷ் 150 கோடி ரூபாய் செலவில் சென்னை போயஸ் கார்டனில் கோலிவுட் திரையுலகமே மூக்கு மேல் விரல் வைத்து வியக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான வீடு ஒன்றைக் கட்டியுள்ளார்.
இவ்வீட்டில் திரையரங்கம், விளையாட்டுக் கூடம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகளும் உள்ளதாகவும் இந்த வீட்டை தனுஷ் தன் பெற்றோருக்காக கட்டிக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தன் முன்னாள் மருமகனான தனுஷின் பெற்றோரை சற்று தரம் தாழ்த்தி தான் நடத்தினாராம்.
இதனால், ரஜினியிடம் தனு ஷுக்கு நீண்ட நாளாகவே மன வருத்தம் இருந்து வந்ததாம்.
இதற்கு ஒரு சரியான தீர்வாக, நாமும் ஒரு வீட்டை இங்கு கட்டி விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்த தனுஷ், ரஜினிகாந்த் வீட்டிற்கு இணையாக அவர் வசிக்கும் பகுதியிலேயே பிரம்மாண்ட வீட்டைக் கட்டியுள்ளா ராம். இந்தத் தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளதாக திரைச்செய்தி தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் 'வாத்தி' படத்தைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் தொடங்கியுள்ளதாகவும் தொடர்ந்து 40 நாள்களுக்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல். தனுஷுக்கு தோசையும் காரக் குழம்பும் மிகவும் பிடிக்கும் எனவும் திரையுலகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
'ஜெயிலர்' படப்பிடிப்பை முடித்த கையோடு தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.25 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.

