விக்ரம் படத்தில் ஹாலிவுட் நடிகர்

விக்ரம் படத்தில் ஹாலிவுட் நடிகர்

1 mins read
7593007f-01d1-42df-a41c-cbfeace6157d
-

விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிக்கின்றனர். உட்பட பலர் நடிக்கின்றனர்.

கோலார் தங்கச் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து '3-டி' தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் 28 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டேனியல் கால்டாகிரோன் புகைப்படத்தை விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு "வேட்டைக் காரரான டேனியலை 'தங்கலான்' திரைப்படத்திற்கு வரவேற்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.