காவல் அதிகாரி தான்யா

3 mins read
f60b017b-a385-4291-be31-6e582f0e2eb0
-

எஸ்.ஆர்.பிர­பா­க­ரன் இயக்­கத்­தில் உரு­வா­கிறது 'றெக்கை முளைத்­தேன்' திரைப்­ப­டம். நாய­கியை முன்­னி­லைப்­படுத்­தும் இப்­ப­டத்­தில், தான்யா ரவிச்­சந்­தி­ர­னும் சசி­கு­மா­ரும் இணைந்து நடித்­துள்­ள­னர்.

"கல்­லூ­ரி­யில் கால்­ப­திக்­கும் போது­தான் பல பெண்­கள் சுதந்­தி­ரத்தை அனு­ப­விக்­கி­றார்­கள். புதிய இறக்­கை­கள் கிடைத்­த­து­போல் பறப்­ப­து­போல் உணர்­வார்­கள். எனி­னும், இந்­தச் சம­யத்­தில் அவர்­கள் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கி­றார்­கள்," என்­கி­றார் தான்யா ரவிச்­சந்­தி­ரன்.

விஜய்­சே­து­ப­தி­யு­டன் தான்யா இணைந்து நடித்த 'கருப்­பன்' படத்­தைப் பார்த்­த­போது அவ­ரது நடிப்­பால் பெரி­தும் கவ­ரப்­பட்­ட­தாக கூறு­கி­றார் பிர­பா­க­ரன்.

தான்­யா­வின் முதிர்ச்­சி­யான நடிப்­பும் கதா­பாத்­தி­ரத்­தின் தன்­மைக்­கேற்ப அவர் தம்மை மாற்­றிக்கொண்­ட­தும்­கூட பிர­பா­க­ர­னுக்­குப் பிடித்­துப்போன­தாம்.

"அனைத்­தை­யும்­விட தான்யா தமி­ழில் சர­ள­மா­கப் பேசக்­கூ­டி­ய­வர், ஒரு நடி­கர் அல்­லது நடிகை குறித்து ரசி­கர்­க­ளி­டம் ஒரு­வித எதிர்­பார்ப்பு இருக்­கும். அவர் இப்­ப­டித்­தான் நடிப்­பார் என்ற மனப்­பிம்­ப­மும் இருக்­கக்­கூ­டும்.

"ஆனால் அந்த எதிர்­பார்ப்­புக்கு நேர்­மா­றான ஒரு கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க வைத்து, அதை ரசிக்­க­வும் வைப்­ப­தில்­தான் இயக்­கு­ந­ரின் திறமை அடங்­கி­யுள்­ளது. அந்த கோணத்­தில் யோசித்­துத்­தான் தான்­யாவை இந்­தப் படத்­தில் காவல்­துறை அதி­கா­ரி­யாக நடிக்க வைத்­துள்­ளேன். அவ­ரும் என் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப அற்­பு­த­மாக நடித்­துள்­ளார்," என்­கி­றார் பிர­பா­க­ரன்.

இது­வரை மென்­மை­யான காத­லி­யாக, மனை­வி­யாக திரை­யில் தோன்றி ரசி­கர்­க­ளின் பாராட்­டு­க­ளைப் பெற்ற தான்யா, காவல்­துறை அதி­கா­ரி­யாக கம்­பீ­ரம் காட்­டி­யி­ருப்­பது படக்­கு­ழு­வி­ன­ரைக்­கூட வியக்க வைத்துள்ளதாம்.

ஜெயப்­பி­ர­காஷ், மீரா கிருஷ்­ணன், 'ஆடு­க­ளம்' நரேன், போஸ் வெங்­கட் என்று இந்­தப் படத்­தில் பல தெரிந்த முகங்­கள் உள்­ளன. மேலும் நான்கு புது­மு­கங்­க­ளை­யும் அறி­மு­கப்­ப­டுத்­து­கிறாராம்.

'கிடா' படத்­துக்கு இசை­ய­மைத்த தீசன்­தான் இந்­தப் படத்­துக்­கும் இசை­ய­மைக்­கி­றார்.

"இது பெண் சுதந்­தி­ரம் குறித்­துப் பேசும் படமா என்று கேட்­கி­றார்­கள். அனைத்து கேள்­வி­க­ளுக்­கும் படத்­தில் விடை இருக்­கும். பொது­வாக, கட்­டுப்­பா­டு­க­ளு­டன் பாது­காப்­பாக வளர்க்­கப்­படும் பெண் குழந்­தை­கள் கல்­லூ­ரிக்­குச் செல்­லும்­போது பெரிய அள­வில் சுதந்­தி­ரம் கிடைத்­து­விட்­ட­தாக கரு­து­வது இயல்பு.

"தனி­யாக வெளியே சென்­று­வர முடி­யும், கைப்­பேசி­யில் தோழி­க­ளு­டன் பேச முடி­யும், பள்­ளிச் சீரு­டை­யைக் கைவிட்டு நினைத்த ஆடை­களை உடுத்­திக்­கொண்டு வலம்­வர முடி­யும் என பல விஷ­யங்­கள் சாத்­தி­ய­மா­கும் கால­மிது.

"மொத்­தத்­தில், இறக்கை முளைத்து பறக்­கும் பரு­வம் அது. எனி­னும், சுதந்­தி­ர­மாக பறக்க நினைக்­கும் பெண்­கள் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கி­றார்­கள். அந்­தச் சிக்­கல்­கள் குறித்து இந்­தப் படத்­தில் அல­சி­யுள்­ளோம்.

இந்­தப் படத்­தின் தயா­ரிப்­பா­ள­ரும் இவர்­தான். ஒரே சம­யத்­தில் இயக்­கு­நர், தயா­ரிப்­பா­ளர் என இரு பொறுப்­பு­க­ளை­யும் சுமக்­கி­றார்.

"இயக்­கு­ந­ராக என் மன­தில் பல சிந்­த­னை­கள் தோன்­றிய வண்­ணம் இருக்­கும். ஒவ்­வொரு யோச­னை­யை­யும் செயல்­ப­டுத்­து­வது தயா­ரிப்­பா­ள­ரின் பொறுப்பு. அந்த வகை­யில், ஒரு பட உரு­வாக்­கத்­தின் ஒவ்­வொரு கட்­டத்­தை­யும் தயா­ரிப்­பா­ள­ராக முன்­னோக்கி நகர்த்­திச் செல்­வது நிச்­ச­யம் பெரிய சுமை­தான்.

"ஒரு படத்­துக்­குத் தேவை­யான அனைத்து அம்­சங்­களும் இடம்­பெற வேண்­டும் என்­ப­து­தான் இயக்­கு­ந­ரின் விருப்­ப­மாக இருக்­கும். அதே சம­யம் தயா­ரிப்­பா­ளர் என்ற வகை­யில் செல­வு­க­ளை­யும் கவ­னத்­தில் கொள்ள வேண்­டி­யி­ருக்­கும்.

"இரு­த­ரப்­பி­லும் சில விட்­டுக்­கொ­டுத்­தல்­கள் இருக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்ற போதி­லும், படத்­தின் தரத்­தில் எந்­த­வித சம­ர­சத்­திற்­கும் இடம் இருக்­கக்­கூ­டாது. எனி­னும், நானே தயா­ரிப்­பா­ளர் என்­ப­தால் முழு­மை­யான சுதந்­தி­ரத்­து­டன் செயல்­பட முடி­கிறது. அது எனக்கு மன­நி­றைவை அளித்­துள்­ளது," என்­கி­றார் பிர­பா­க­ரன்.

, :

தமிழகத்  