'சேலை என்பது ஒரு மொழி'

'சேலை என்பது ஒரு மொழி'

1 mins read
759578b7-cfd5-48de-9417-1571ba730676
-

தமக்­குப் பிடித்­த­மான உடை­களில் சேலைக்­குத்­தான் முத­லி­டம் என்கி­றார் நடிகை மஞ்சு வாரி­யர்.

அண்­மை­யில் புதுப்­பு­ட­வை­யுடன் அவர் காட்­சி­ய­ளிக்­கும் புகைப்­ப­டங்­கள் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கின. அவற்­றைக் கண்ட ரசி­கர்­கள் பலர் மஞ்சு வாரி­யர் புட­வை­யில் மிக அழ­காக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

சேலை­யில் உள்ள புகைப்­ப­டத்­தின் கீழே, 'சேலை என்­பது வெறும் ஆடை­யல்ல. அது ஒரு மொழி' என்று குறிப்­பிட்­டுள்­ளார் மஞ்சு.

அவ­ரது இந்­தப் பதி­வும் வாசகமும் இணை­ய­வா­சி­களை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளது.

இதற்­கி­டையே, தமிழ்த் திரை­யு­ல­கில் இருந்து புது வாய்ப்­பு­கள் தேடி­வ­ரு­வ­தால் உற்­சா­க­ம­டைந்­துள்­ளார் மஞ்சு வாரி­யர். மீண்­டும் தனுஷ், அஜித்­து­டன் நடிக்க விரும்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், தனி நாய­கி­யாக நடிக்­கத் தயார் என்­றா­லும், கதைக்­க­ளம் மிக வலு­வாக இருந்­தால் மட்­டுமே அது சாத்­தி­யம் என்­கி­றார்.

"சமூ­கத்­துக்கு நல்ல கருத்­து­களைச் சொல்­லக்­கூ­டிய கதை­களுக்கு முன்­னு­ரிமை அளிப்­பேன். சினிமா என்­பது பொழு­து­போக்கு ஊட­க­மாக இருந்­தா­லும் அதன் மூலம் மக்­க­ளுக்­குப் பயனுள்ள பல­வற்­றைச் சொல்ல முடி­யும்.

"வெறும் நடி­கை­யாக மட்­டு­மல்­லா­மல், சமூ­கத்­தின் மீது அக்­கறை கொண்ட பெண்­ணாக இருக்க விரும்­பு­கி­றேன். நம்­மால் இயன்­ற­வற்றை சமூ­கத்­துக்­கா­கச் செய்யவேண்டும்," என்று நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் கூறு­கிறா­ராம் மஞ்சு வாரி­யர்.