அஜித் வழியைப் பின்பற்றி நரைத்த தலைமுடியுடன் திரையில் தோன்ற உள்ளார் ஜெயம் ரவி. 'சால்ட் பெப்பர்' தோற்றத்துடன் வெளியாகி உள்ள அவரது புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் 'சைரன்' படத்துக்காகத்தான் இந்தப் புதிய தோற்றமாம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.
ஒரு சிறைக் கைதியின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதைக்களத்தைக் கொண்டு உருவாகிறது 'சைரன்'.
அண்மையில் இயக்குநர் அந்தோணி பாக்யராஜின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஜெயம் ரவி சற்று வயதான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் 'அகிலன்'. கல்யாண் கிருஷ்ணன் இயக்கி உள்ளார்.
இதில் குண்டர் கும்பல் தலைவனாக நடிக்கும் ரவிக்கு பிரியா பவானி சங்கர் ஜோடி. இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரியா.
இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் வெளியாகிறது.
அகமது இயக்கத்தில் நயன்தாராவும் ஜெயம் ரவியும் இணைந்து நடித்துள்ள 'இறைவன்' படமும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

