'கம்பீர சிம்புவைப் பார்க்கலாம்'

'கம்பீர சிம்புவைப் பார்க்கலாம்'

3 mins read
ea70214d-6e2e-44d5-98b6-d04aac38c4fa
-

கன்­ன­டத்­தில் வெளி­யாகி வெற்­றி­பெற்ற 'மஃப்டி' படத்­தின் தமிழ் மறு­ப­திப்­பாக உரு­வா­கிறது 'பத்து தல'. சிம்பு நடிப்­பில் அடுத்து வெளி­யாக உள்ள இந்­தப் படம் குறித்து அதிக தக­வல்­கள் வெளி­யா­க­வில்லை.

இந்­நி­லை­யில், அண்­மைய பேட்­டி­யில் சிம்­பு­வு­டன் இணைந்து பணி­யாற்­றி­யது குறித்து விரி­வா­கப் பேசி­யுள்­ளார் இயக்­கு­நர் ஓபிலி என்.கிருஷ்ணா.

இவ­ரது முதல் படம் 'சில்­லுனு ஒரு காதல்' வெளி­யாகி கிட்­டத்­தட்ட 16 ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. இந்­நி­லை­யில், அந்­தப் படத்தை தயா­ரித்த ஞான­வேல்­ரா­ஜா­தான் 'பத்து தல' படத்­தை­யும் தயா­ரிக்­கி­றார்.

"ஒரு முன்­னணி தயா­ரிப்­பா­ளர் இத்­தனை ஆண்­டு­கள் கடந்தபிற­கும் ஓர் இயக்­கு­நர் மீது நம்­பிக்கை வைத்து வாய்ப்பு கொடுப்­பது வியப்­புக்­கு­ரிய விஷ­யம். இதற்­காக தயா­ரிப்­பா­ள­ருக்கு நன்றி தெரி­விக்க வேண்­டும்.

"இதற்கு முன் 'மாநாடு', 'வெந்து தணிந்­தது காடு' என இரண்டு வெற்­றிப் படங்­களைக் கொடுத்­துள்­ளார் சிம்பு. அத­னால் மூன்­றா­வது வெற்­றியை எதிர்­நோக்­கி­யுள்ள அவ­ரது ரசி­கர்­கள் ஏமாற்­ற­ம­டை­யாத வகை­யில் ஒரு வெற்­றிப் படைப்­பைக் கொடுக்க வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ளேன்.

"தொடக்­கத்­தில் இந்த எதிர்­பார்ப்பு கார­ண­மாக ஒரு­வித அழுத்­தத்தை உணர்ந்­தேன். அதன்பிறகு இதுவே படத்தைப் பாதித்து, நம்­மை­யும் அறி­யா­மல் தவறு செய்­து­வி­டும் வாய்ப்­புண்டு என்­பதை உணர்ந்து பணி­களில் கவ­னம் செலுத்தி­னேன்.

"கன்­ன­டத்­தில் வெளி­யான 'மஃப்டி' படத்­தின் கதைக்­க­ளம், சில கதா­பாத்­தி­ரங்­களை மட்­டுமே எனது படத்­தில் பயன்­ப­டுத்­திக்கொண்­டேன்.

"குறிப்­பாக கதா­நா­ய­க­னுக்­கான பாத்­தி­ரத்­தின் தன்மையை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­டுள்­ளோம். அத­னால் ரசி­கர்­க­ளுக்கு அவ­ரது கதா­பாத்­தி­ரம் மிக­வும் பிடித்­துப்போகும்," என்­கி­றார் இயக்­கு­நர் என்.கிருஷ்ணா.

இயக்­கு­நர்­கள் வெங்­கட்­பி­ர­பு­வும் கௌதம் மேன­னும் சிம்­புவை அடுத்த கட்­டத்­துக்­குக் கொண்டு சென்­றுள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், தனது படமும் சோடை போகாது என்­கி­றார்.

"இந்­தப் படத்­தில் மணல் மாஃபியா தலை­வ­னாக வரு­கி­றார் சிம்பு. பிர­ம்மாண்­ட­மான ஓர் அமைப்­புக்கு தலை­மை­ ஏற்­றுள்­ள­தால் அதற்­கேற்ப தனது தோற்­றத்தை அவர் மாற்­றிக்கொண்­டுள்­ளார்.

"கடை­சி­யாக அவர் நடித்த இரண்டு படங்­க­ளி­லும் உடல் இளைத்து தனது தோற்­றத்­தில் வித்­தி­யா­சம் காட்­டி­யி­ருப்­பார். ஆனால் 'பத்து தல' படத்­துக்­காக உடல் எடையை அதி­க­ரிக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­ட­போது சலித்­துக்கொண்­டார்.

"இப்­போ­து­தான் இரண்டு படங்­க­ளுக்­காக கடு­மை­யாக உடற்­ப­யிற்சி எல்­லாம் செய்து உடல் எடை­யைக் குறைத்­தேன். இப்­போது மீண்டும் எடையை அதி­க­ரிக்­கச் சொல்­கி­றீர்­களே என்­றும் கேட்­டார்.

"ஆனால் படப்­பி­டிப்­பின் முதல் நாளன்று யாருமே எதிர்­பா­ராத வகை­யில் தனது கதா­பாத்­தி­ரத்­துக்­கான ஒப்­பனையுடன் அவர் வந்­த­போது அனை­வ­ருமே உண்மையில் அசந்து போனோம். உடல் எடை கூடி, தனது கதா­பாத்­தி­ர­மா­கவே அவர் கம்­பீ­ர­மாக நடந்து வந்­த­போது, படக்­கு­ழு­வில் இருந்த அனை­வ­ரும் கைதட்டி வர­வேற்­றோம். படப்­பி­டிப்பு முடி­யும் வரை அவர் கதா­பாத்­தி­ர­மா­கவே வலம் வந்­தார். அவ­ரது இந்­தப் பண்பு என்னை வெகு­வா­கக் கவர்ந்­தது.

"அதே­போல் தனது கதா­பாத்­தி­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­களை அவர் மறக்­கவே மாட்­டார். ஒரு­வேளை நாம் மறந்­து­விட்­டா­லும் அதைச் சுட்டிக்­காட்­டு­வார்," என்­கி­றார் இயக்கு­நர் கிருஷ்ணா.

'பத்து தல' படத்தில் நடி­கர் கௌதம் கார்த்­திக்­கும் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார். அவரை இது­வரை பார்த்­தி­ராத புதிய பரி­மா­ணத்­தில் திரை­யில் காட்­டி­யுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

பிரியா பவானி சங்­கர், கவி­ஞர் மனுஷ்­ய­புத்­தி­ரன், இயக்­கு­நர் கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, 'அசு­ரன்' டீஜே அரு­ணா­ச­லம், கலை­ய­ர­சன், 'சார்­பட்டா' சந்­தோஷ் என்று கதைக்­குப் பொருத்­த­மான பலர் இப்­ப­டத்­தில் பங்­கேற்­றுள்­ள­தா­கச் சொல்­லும் இயக்­கு­நர் கிருஷ்ணா, பிரியா பவானி சங்­க­ரின் நடிப்பு அரு­மை­யாக உள்­ளது எனப் பாராட்­டு­கி­றார்.

"மணல் கொள்­ளை­யைத் தடுக்­கும் ஒரு துணிச்­ச­லான தாசில்­தார் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார் பிரியா. அவ­ரது பாந்­த­மான நடிப்புக்கு ரசி­கர்­கள் கூட்­டம் தொடர்ந்து அதி­கரிக்­கும் என உறு­தி­யா­கச் சொல்­வேன்.

"எனது அபிமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் ஓர் ஆலமரம். அந்த மரத்தில் ஒரு சின்ன நிழல் கிடைத்தாலே சில்லென்று சுகமாக இருக்கும். அவரும் இந்தப் படத்துக்காக விரும்பி உழைத்துள்ளார். வசனங்களை எழுத்தாளர் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அவையும் இப்படத்தின் வெற்றிக்கு கைகொடுக்கும்," என்கிறார் இயக்குநர் கிருஷ்ணா.

, :

தமிழகத்  