திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
3bea6799-e0d7-479a-9c05-f068d57107f4
-
multi-img1 of 2

 தமிழ் சினிமாவின் முதல் உச்ச நட்சத்திரமான எம்.கே. தியாகராஜ பாகவதரின் 114வது பிறந்தநாள் அண்மையில் அனுசரிக்கப் பட்டது. இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க தாம் தயாராக உள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார். இதற்கான திரைக்கதையையும் தயார் செய்துள்ளாராம். "அவர் 49 வயதில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். புகழின் உச்சம் கண்டவர். சுகபோக வாழ்க்கையை அனுபவித்தவர். பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். அனைவருக்கும் பாடமானது அவரது வாழ்க்கை. உரிய தயாரிப்பாளர் கிடைக்கும்போது எனது திரைக்கதை திரைப்படமாகும்," என்கிறார் பார்த்திபன்.

 'வாத்தி' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள சம்யுக்தா மேனனைப் பாராட்டித் தீர்க்கிறார் மலையாளத் தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ். அவர் தயாரித்த 'எடக்காடு பட்டாலியன்' படத்தில் நடித்ததற்காக சம்யுக்தாவுக்கு 65% சம்பளம்தான் கொடுத்தேன். படம் வசூல் ரீதியில் தோல்வி கண்டபோதும், மீதமுள்ள ஊதியத்தை தர முன்வந்துள்ளார் சாண்ட்ரா தாமஸ். ஆனால் அதை வாங்க மறுத்துவிட்டாராம் சம்யுக்தா. "அவரது நல்ல மனதுக்கு முன் நான் தலைவணங்க வேண்டியிருந்தது. முழு ஊதியமும் தரவில்லை என்றால் 'டப்பிங்' பேசவும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் வர மறுக்கும் நடிகைகளுக்கு மத்தியில் சம்யுக்தா ஒரு பாடப்புத்தகம் போன்றவர்," என்கிறார் சாண்ட்ரா.

 ரஜினியின் 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜெய் பீம்' பட இயக்குநர் ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளார் என அந்நிறுவ னம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லைகா தயாரிப்பில் மூன்றாவது படத்தில் நடிக்கிறார் ரஜினி. மேலும், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

 சுந்தர்.சி. இயக்கும் 'அரண்மனை' படத்தின் நான்காம் பாகத்தில் ராஷி கண்ணா, தமன்னா ஆகிய இருவரும் நாயகிகளாக ஒப்பந்தமாகி உள்ளனர். இம்முறை தாமே நாயகனாக நடிப்பது என முடிவெடுத்துள்ளாராம் சுந்தர்.சி.