ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'பஹிரா' படம் வசூலில் சாதித்துள்ளதா என்பது பட வசூல் விவரங்கள் முழுமையாக வெளியானதும் தெரியவரும்.
முதன்முறையாக நான்கு நாயகிகளுடன் பிரபுதேவா இணைந்து நடிப்பதாகத்தான் முதலில் விளம்பரம் செய்திருந்தனர்.
அதன் பிறகு பிரபுதேவா பல வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதாகவும் ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒரு கதாநாயகி ஜோடியாக நடிப்பார் என்றும் விளம்பரங்கள் வெளியாகின.
அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என்று பல நாயகிகளுடன் திரையில் வலம் வந்துள்ளார் பிரபுதேவா.
இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஏழு நாயகிகளும் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பிரபுதேவா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒருவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம் என்று காயத்ரி சொல்கிறார்.
"இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னைப் பிரபுதேவா மாஸ்டருடன் இணைந்து நடனமாட அனுமதிக்கவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம்தான்.
"இந்தப் படத்தில் என்னுடைய வழக்கமான பாணியில் இருந்து வெளியேறி வித்தியாசமாக நடிக்க முயன்றேன். இது அனைவருக்குமான முழுநீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகி உள்ளது," என்கிறார் காயத்ரி.
இதற்கு முன்பு தாம் நடித்த படங்களைவிட 'பஹிரா' வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டுள்ளது என்றும் இந்தப் படத்தின் மூலம் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கும் தமது நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளது என்றும் சொல்கிறார் ஜனனி.
"இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து பெரிய நட்சத்திரங்களுடனும் பணிபுரிந்திருந்தவர் பிரபுதேவா. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் மிக பணிவாகவும் எளிமையாகவும் வலம் வந்தார்.
"இந்தப் படத்திற்காக அணுகியபோது, எனது கதாபாத்திரம் திரையில் குறைந்த நேரமே வரும் எனவும் ஆனால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் குறிப்பிட்டார்கள்.
"பல நாயகிகள் நடித்துள்ள போதிலும் எங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளோ, மோதல்களோ ஏற்படவில்லை," என்கிறார் ஜனனி.
தனது திரைப்பயணத்தில் இதுவரை தாம் நடித்த படங்களில் 'பஹிரா' ஆகச் சிறப்பான படைப்பு என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.
பல நாயகிகள் நடித்துள்ள போதிலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை என ஆதங்கப்படுகிறார்.
"இந்தப் படத்தில் பிரபுதேவா வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு வேடத்துக்காகவும் அவர் கடுமையாக உழைத்ததை நேரில் பார்த்தேன். அவர் வெளிப்படுத்தியுள்ள நடிப்பும் உடல்மொழியும் ரசிகர்களை அசர வைக்கும்.
"தனக்குள் அவர் எவ்வளவு சக்தியை ஒளித்து வைத்திருக்கிறார் என்பதை இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் தெரிந்துகொள்ள முடியும்," என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.
, :
தமிழகத்

