தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெலுங்குப் படத்தில் சூர்யா

1 mins read
cc3bdd0f-dc8d-4ced-ba55-7882d9def321
-

நேரடி தெலுங்­குப் படம் ஒன்­றில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளார் சூர்யா. இதற்­காக இது­வரை பெற்­றி­ராத சம்­ப­ளத்­தைப் பெற உள்­ளா­ராம்.

தெலுங்­கில் சூர்யா நடிக்க இருக்­கும் படத்தை 'சீதா ராமம்' படத்­தின் இயக்­கு­நர் ஹனு ராக­வ­புடி இயக்க இருப்­ப­தா­கத் தக­வல். தெலுங்­குத் திரை­யு­ல­கில் பல்­வேறு வெற்­றிப் படங்­களைத் தயா­ரித்­துள்ள மைத்ரி மூவி மேக்­கர்ஸ் தான் சூர்­யா­வின் புதுப்படத்தை தயா­ரிக்க இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இப்­ப­டத்­தின் கதையை இயக்­கு­நர் முத­லில் தெலுங்கு முன்­னணி நடி­கர்­க­ளான ராம் சரண், நானி ஆகி­யோ­ரி­டம்­தான் கூறி­யுள்­ளார். இரு­வ­ரும் வேறு படங்­க­ளுக்கு கால்­ஷீட் ஒதுக்­கி­விட்­ட­தால் ஹனு­வின் அழைப்பை ஏற்க முடி­ய­வில்­லை­யாம். அதன் பிறகே சூர்யாவைச் சந்­தித்து கதை சொல்லி உள்­ளார்.

சூர்­யா­வுக்கு கதை பிடித்­துப் போகவே, உடனே கால்­ஷீட் ஒதுக்­கி­விட்­டா­ராம். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாம்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.

சூர்யா தற்­போது தனது 42வது படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். சிறுத்தை சிவா இயக்­கும் இந்­தப் படம் விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது. அதன் பின்­னர் வெற்றி மாற­னின் 'வாடி­வா­சல்' படத்­தில் நடிப்­பார் என்­றும் அதன் பிறகே ஹனு­வின் இயக்­கத்­தில் நடிப்­பார் என்­றும் தெரி­கிறது.