திரையுலகில் பல்வேறு தடைகளைக் கடந்து சாதித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் சமந்தாவுக்குத்தான் முதலிடம் என்கிறார் பாடகி சின்மயி.
தடைகளைக் கடந்து புதுவிதிகளை உருவாக்கி வரும் சமந்தா, சிரமமான காலகட்டங்களில் தமக்குப் பக்கபலமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
"மற்றவர்கள் என் மீது நம்பிக்கை இல்லாமல் விலகியபோது சமந்தா எனக்குத் துணை நின்றார். இப்போதும் ஆதரவாக உள்ளார். 'மீ டூ' இயக்கத்தில் என்னுடன் அவர் துணை நின்றார். சமந்தாவுக்குப் பலவகையிலும் கடமைப்பட்டுள்ளேன்," என்கிறார் சின்மயி.
இதற்கிடையே, உண்மையான தோழி என்றால் அது சின்மயிதான் என்கிறார் சமந்தா.
"சின்மயியும் அவரது கணவர் ராகுலும் பத்து ஆண்டுகளாக என் நண்பர்களாக உள்ளனர். இருவரும் நல்ல நட்புக்கு இலக்கணமாக விளங்குபவர்கள்," என்கிறார் சமந்தா.

