‘அகிலன் சவாலான படைப்பு’

இரு­பது ஆண்­டு­கால திரைப் பய­ணத்­தில் பல்­வேறு நல்ல விஷ­யங்­க­ளைக் கற்­றுக் கொண்­ட­தா­க­வும் பல்­வேறு மேடு பள்­ளங்­க­ளைச் சந்­தித்­த­தா­க­வும் சொல்­கி­றார் நடிகர் ஜெயம் ரவி.

‘பூலோ­கம்’ படத்­திற்கு பின் ஜெயம் ரவி நடிப்பில், இயக்­கு­நர் கல்­யாண கிருஷ்­ணன் இயக்கத்தில் உரு­வாகி உள்ள திரைப்­ப­டம் ‘அகி­லன்’.

பிரியா பவானி சங்­கர், தான்யா ரவிச்­சந்­தி­ரன் ஆகிய இருவரும் நாய­கி­க­ளாக நடித்­துள்­ள­னர். சிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்­த­மன், தருண் அரோரா, மது­சூதன் ராவ் உள்­ளிட்ட முன்­னணி நட்­சத்­தி­ரங்­கள் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். சாம் சிஎஸ் இசை­ய­மைப்­பில் உரு­வா­கும் இப்­ப­டம் ஜெயம் ரவி ரசிகர்­கள் மத்­தி­யில் நிறைய எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில், இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு நேற்று முன்­தி­னம் வெளி­யா­னது. இந்த நிகழ்­வில் பேசிய ஜெயம் ரவி, தமது திரை வாழ்க்­கை­யில் ரசி­க­ர்க­ளின் ஒத்­து­ழைப்­பும் பாராட்­டும் நிறைய கிடைத்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

எப்­போ­தும் எல்­லா­ரு­ட­னும் நண்­பர்­க­ளாக இருக்க வேண்­டும் என்­பதே தமது விருப்­பம் என்­றும் கூறி­னார்.

“பட உரு­வாக்­கம் என்று வரும்­போது ‘அகி­லன்’ திரைப்­படம் மிகச் சவா­லான ஒரு படைப்பு என்­பேன். இந்­தப் படத்­துக்­காக நிறைய உழைக்க வேண்­டி­யி­ருந்­தது.

“குறிப்­பிட்ட சில தொழில்­நுட்ப வச­தி­கள் கிடைக்­குமா, சில சவா­லான காட்­சி­களைத் திரை­யில் கொண்டு வர இய­லுமா என்ற சந்­தே­கங்­கள் எழுந்­தன. ஆனால் ஒரு தயா­ரிப்­பா­ளர் நினைத்­தால் எல்­லாம் சாத்­தி­ய­மா­கும் என்­பது இப்­ப­டத்­தில் நடித்­த­போது புரிந்­தது. அப்­ப­டிப்­பட்ட தயா­ரிப்­பா­ளர் அமைந்­த­தால்­தான் இந்­தப் படம் சாத்­தி­ய­மா­னது. ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வுக்கு இதற்­காக நன்றி தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

“தயா­ரிப்­பா­ளர் சுந்­தர் எனது சகோ­த­ர­ரைப் போன்­ற­வர். அவ­ரும் நானும் மேலும் பல படங்­களில் இணைந்து பணி­யாற்­றப் போகி­றோம். எங்­கள் பய­ணம் தொடரும்.

“இயக்­கு­நர் கல்­யா­ணைப் பொறுத்­த­வ­ரை­யில் மிகுந்த திற­மை­சாலி. அதை­விட, கடும் உழைப்­பாளி, நல்ல சிந்­த­னை­யா­ளர் எனலாம்.

“நல்ல விஷ­யங்­களை மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க விரும்­பும் படைப்­பாளி அவர். மேலும் பல வெற்­றி­கள் அவ­ருக்கு அமைய வேண்­டும். ‘அகி­லன்’ படம் நல்ல படைப்­பாக உரு­வா­ன­தற்கு அவ­ரது குழு­வி­னர்­தான் கார­ணம்,” என்று இயக்­கு­ந­ருக்­கும் தயா­ரிப்­பா­ள­ருக்­கும் பாராட்­டு­க­ளைக் குவித்­தார் ஜெயம் ரவி.

‘அகி­லன்’ படத்­தின் இரு கதா­நா­ய­கி­களும் தங்­கள் பங்­க­ளிப்பைச் சிறந்த முறை­யில் வழங்­கி­யுள்­ள­தா­கப் பாராட்­டிய அவர், இரு­வ­ரது கதா­பாத்­தி­ர­மும் ரசி­கர்­களைக் கவ­ரும் என்­றார்.

“பிரியா பவானி சங்­கர் நன்­றா­கத் தமிழ் பேசி நடிக்­கும் கதா­நா­யகி. ஒவ்­வொரு படத்­தி­லும் அவர் தனது திற­மையை மெரு­கேற்­றிக்­கொண்டே வருகி­றார். அவர் மேலும் பல உய­ரங்­க­ளைத் தொட வாழ்த்­து­கள்.

“தான்யா ரவிச்­சந்­தி­ரன் இயல்­பாக நடிக்­கக்­கூ­டி­ய­வர். இந்­தப் படத்­தில் அவ­ரது நடிப்பு பாராட்­டப்­படும். மேலும், திரை­யில் அவர் தோன்­றும்­போது ரசி­கர்­க­ளுக்கு ஓர் ஆச்­ச­ரி­யம் காத்­தி­ருக்­கும்.

“இந்­தப் படம் நல்ல படைப்­பாக உரு­வாகி உள்­ளது. அத­னால் அனைத்துத் தரப்பு ரசி­கர்­க­ளுக்­கும் பிடிக்­கும்.

இதற்­கி­டையே ‘அகி­லன்’ படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித்­தொ­குப்­புக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது,” என்­கி­றார் ஜெயம் ரவி.

துறை­மு­கப் பகு­தி­யில் நடக்­கும் பல்­வேறு சட்­ட­வி­ரோ­தச் செயல்­கள், கடத்­தல்­களை நாய­கன் ஜெயம் ரவி அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றார். இத­னால் அவர் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­கள்­தான் கதை­யாம்.

இதில் பிரியா பவானி சங்­கர் காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்­துள்­ளார். ஜெயம் ரவியை சுட்­டுக்­கொல்­லப் போவ­தாக நாய­கியே வெளிப்­ப­டை­யா­கச் சொல்­கி­றார்.

இத­னால் திரைக்­கதை விறு­வி­றுப்­பாக இருக்­கும் என்று ரசி­கர்­கள் சமூக ஊட­கப் பதி­வு­களில் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்கிடையே, ஜெயம் ரவி அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதாக ஒரு தகவல் அண்மையில் வெளியானது. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் வலம் வந்தது. எனினும் அத்தகவல் உண்மையல்ல என்று ரவி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

, :

தமிழகத்  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!