சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தேன் என்று கூறியிருந்தார் பிரியா பவானி சங்கர். அவர் கூறியதுபோல் பல படங்களில் நடித்து கல்லாவை நிரப்பி வருகிறார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிகரமான கதாநாயகிகளாக மாறியவர்கள் மிகச் சிலரே.
அந்த வகையில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்து, பின்னர் தொலைக்காட்சித் தொடரில் நடித்து, சினிமாவிற்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். ஆனால் தற்போது சத்தமே இல்லாமல் முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடித்து விட்டார்.
கடந்த ஆண்டு தனுஷுடன் இவர் இணைந்து நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தின் வெற்றி இவரை முன்னணி நாயகிகள் பட்டியலில் சேர்த்தது.
இந்த ஆண்டு துவக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் தெலுங்கில் இவர் முதன்முறையாக நடித்த 'கல்யாணமாம் கல்யாணம்' என்ற திரைப்படம் வெளியானது.
இந்
நிலையில் முன்னணி நாயகர்
களுடன் இணைந்து நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இது அண்மையில் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒரு பெருமை என்றே சொல்லலாம்.
மார்ச் 10ஆம் தேதி ஜெயம் ரவி ஜோடியாக இவர் நடித்துள்ள 'அகிலன்' திரைப்படம் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 30ல் சிம்பு, கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ள 'பத்து த'ல படம் வெளியாகிறது.
அடுத்ததாக ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் ஜோடியாக இவர் இணைந்து நடித்துள்ள 'ருத்ரன்' திரைப்படம் வெளியாக இருக்கிறது.
அதையடுத்து 'இந்தியன் 2', 'பொம்மை', 'டிமான்டி காலனி '2, 'ஜீப்ரா' என கைவசம் நிறைய படங்களையும் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் 2023 இவருக்கான ஆண்டு என தாராளமாகச் சொல்லலாம் என்கிறது கோலிவுட்.

