இயக்குநர் ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'பப்ளிக்'. இந்த படம் முன்னைய மற்றும் சமகால அரசியலை நையாண்டி செய்யும் படமாக உருவாகி உள்ளது.
சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுக்கோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட முதல் சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்ததாக வெளியான முன்னோட்டக் காட்சியில் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே தெரியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், "கட்சி பெயரே சொல்லத் தெரியலை. எப்படி இடம் வாங்கித் தருவது?" என்று கேட்பது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்குறள் எழுதியது திருவள்ளுவரா என்ற இலக்கிய அணிக்கு சாதகமாக பேச வரும் ஒருவர் கேட்கும் காணொளியையும் வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் "உருட்டு...உருட்டு" என்ற பாடல் அரசியல் கட்சிகளை வெளிப்படையாகவே கிண்டல் செய்து உருவாகி உள்ளது 'பப்ளிக்'.