சிம்பு தனது 48வது படத்தில் கமலின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இவரின் நடிப்பில் 'பத்து தல' என்ற படம் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தொடர்ந்து இவர் நடித்த மூன்று படங்கள் வெற்றி பெற்றதால் இவர் தன்னுடைய சம்பளத்தை 40 கோடி ரூபாய்க்கு உயர்த்தியுள்ளார்.
அதன் காரணமாக இவர் நடிக்க இருந்த 'கொரோனா குமார்' படத்தைக் கைவிட்டார் தயாரிப்பாளர். இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதுப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது. அதைத்தொடர்ந்து இப்படத்திற்காக சிம்பு தன் கொள்கையைத் தளர்த்தி உள்ளார்.
கமலின் தயாரிப்பு என்பதால் எந்தவித பேரமும் பேசாமல் தன் சம்பளத்தை குறைத்து இருக்கிறார் சிம்பு. மேலும் இக்கதையின் மேல் சிம்பு அதீத நம்பிக்கை வைத்துள்ளதால் இப்படம் தன்னை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையில் சிம்பு இருப்பதாகத் தெரிகின்றது.

