சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நாயகன்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நாயகன்

1 mins read
fd144a50-cf2f-4d03-a1f2-99fc77a3f8b3
-

மேலும் ஒரு படத்­தில் கதா­நா­ய­க­னாக நடிக்க உள்ளார் சூரி.

பி.எஸ்.வினோத்­ராஜ் இயக்­கும் அப்­ப­டத்­திற்கு 'கொட்­டுக்­காளி' எனப் பெய­ரிட்­டுள்­ள­னர். நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன் தயா­ரிக்­கி­றார்.

வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் 'விடு­தலை' படத்­தில் நாய­க­னாக நடித்­துள்­ளார் சூரி. இந்­நி­லை­யில், 'கூழாங்­கல்' படத்தை இயக்­கிய பி.எஸ்.வினோத்­ராஜ் கூறிய கதை பி­டித்­துப்போக, அதைப் பட­மாக தயா­ரிக்க முன்­வந்­துள்­ளார் சிவ­கார்த்­தி­கே­யன்.

சூரியை நாய­க­னாக நடிக்க வைக்­க­லாம் என்று இயக்­கு­நர் கூறி­யதைத் தயக்­க­மின்றி ஏற்றுக்­கொண்­டா­ராம்.

'கொட்­டுக்­காளி' படத்­தில் மலை­யாள நடி­கை­யான அன்னா பென் நாய­கி­யாக நடிக்­கி­றார்.