பனை மரங்களைக் காப்பாற்ற வலியுறுத்தும் படம் 'நெடுமி'

பனை மரங்களைக் காப்பாற்ற வலியுறுத்தும் படம் 'நெடுமி'

1 mins read
99221cc8-d728-4d5c-a89f-9ff1b35acf6d
-

பனை மரங்­க­ளை­யும் அவற்­றைச் சார்ந்­துள்ள லட்­சக்­க­ணக்­கா­னோ­ரின் வாழ்­வா­தா­ரங்­க­ளை­யும் காப்­பாற்ற வேண்­டும் என்ற கருத்தை வலி­யு­றுத்­து­கிறது 'நெடுமி' திரைப்­ப­டம்.

இதில் நாய­க­னாக பிர­தீப் செல்­வ­ராஜ், நாய­கி­யாக அபி­நயா நடித்­துள்­ள­னர். ஏ.ஆர்.ராஜேஷ், பிரீத்தி ரமேஷ், வாசு, கிசோர் மணி, குழந்தை நட்­சத்­தி­ரங்­கள் சரத்­ராஜ், ராம்கி, முர­ளி­த­ரன், வெங்­க­டே­சன் ஆகி­யோர் முக்கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். நந்தா லட்­சு­மன் இயக்கி உள்ளார்.

"நான் ஏற்­கெ­னவே சில குறும்­ப­டங்­களை இயக்கி உள்ளேன். சுனாமி, புயல்­கள் வந்­தா­லும் தடை­க­ளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்­பவை பனை மரங்­கள்.

"மனித உழைப்­பைக் கோராமல் மனி­த­னுக்கு அள்­ளிக் கொடுப்­பவை பனை மரங்­கள்­தான். அவற்­றைச் சார்ந்து வாழும் மக்­கள் வாழ்­வா­தா­ரம் இழந்து பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். அவர்­களின் வாழ்­வி­யலைப் பேசும் படமாக நெடுமி உரு­வா­கிறது," என்கி­றார் நந்தா.